Skip to main content

இழந்த காதல்

 சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய நாவல் A Tale of two Cities. அதில் வரும் ஒரு அத்தியாயத்தின் தலைப்பு  The fellow of no delicacy. அவன் தான் ஸிட்னி கார்ட்டன். அவன் ஒரு குறிக்கோளற்ற மனிதன். குடிகாரன். நிம்மதி இழந்து அலையும் ஒரு உயிர். அவனுக்கு லூஸி மானெட்டின் மீது காதல். கனிவும் நல்ல இயல்பும் கூடிய பெண்மை அது. எந்த விதத்திலும் அவன் அவளுக்குத் தகுதியானவன் அல்ல. இதை அறிந்நே இருக்கிறான். அவன் லூஸி மானெட்டைத் தனியே சந்தித்துப் பேசுவதுதான் இந்த அத்தியாயம்.


அவனுடைய கால்கள் அந்த கல் பதித்த நடைபாதையில் பல இரவுகள் நடந்திருக்கின்றன.  மது அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்ததில்லை. துக்கத்தில் தான் தள்ளி இருக்கிறது. இலக்கை அறியாதது அவனது கால்கள். விடியும் வரை அவன் நடந்தது உண்டு.  தேவாலயங்கள், புராதனமான கட்டிடங்களில் சூரியனின் முதல் கிரணம் விழுகின்ற வரை. படுக்கையில் விழுந்தாலும் உறக்கம் அவனைப் பற்றியது இல்லை. இன்று இரவு அவனது கால்கள் ஒரு இலக்கை அறிகிறது. அது லூஸி மானெட்டின் இல்லம். வீட்டில் விளக்கு எரிகிறது.  அவன் உள்ளே நுழைகிறான். அவனது வரவு அறிவிக்கப் படுகிறது. மாடியில் லூஸி மானெட் தனித்து இருக்கிறாள். அவன் உள்ளே நுழைந்து நாற்காலியில் அமர்கிறான். லூஸி மானெட் எதிர்பாராதது இந்த வரவு.


உங்கள் முகம் சரியாக இல்லை. உடலுக்கு ஏதாவது?


எனது வாழ்க்கையும் சரியாக இல்லை. எனது பழக்க வழக்கங்கள் எல்லாமும். உடல் எப்படிச் சரியாக இருக்கும்?


மாற்றிக் கொள்ளலாமே?


காலம் கடந்து விட்டது. இனி வாய்ப்பு இல்லை. நான் கீழே கீழே மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.


முகத்தை அவன் முடிக் கொள்கிறான் கைகள் நடுங்குகின்றன.


மன்னிக்கவும். உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். 


அது உங்களுக்கு உதவுமானால் நான் கேட்கத் தயாராக இருக்கிறேன்.


உங்கள் கருணைக்கு நன்றி. கடவுளின் ஆசி எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்.


இப்படியாக அவர்கள் பேச்சு தொடர்கிறது.


சரியாக வாழாத ஒரு குடிகாரனின் காதலை அவள் ஏற்க முடியாது என்பதை அறிந்தவனாய் அவன் பேசுகிறான். மனதில் உள்ளதை எல்லாம் அவளிடம் கொட்டி விடுகிறான். அவனது நல்ல குணம் அவளுக்குத் தெரிகிறது. அவனுக்காக அவள் மனம் கசிகிறது. எப்படியாவது இந்த நிலையிலிருந்து அவன் மீண்டு வர வேண்டும் என்று விரும்புகிறாள். அவனோ பயனற்ற தனது வாழ்வில் எதுவும் மாறாது என்று அறிந்து இருக்கிறான்.   ஸிட்னி கார்ட்டன் அவளுக்காக, அவளைச் சேர்ந்தவர்களுக்காக தனது உயிரைத் தரவும் சித்தமாக இருப்பதாகக் கூறுகிறான்.  என்றும் அவளைத் தன் நினைவில் வைத்துப் போற்றுவேன் என்று சொல்லி விடை பெற்றுக் கொள்கிறான். 


டிக்கன்ஸ் மிகவும் அற்புதமாக இந்தப் பகுதியை எழுதி இருப்பார்.


சர்வர் சுந்தரம் என்று ஒரு திரைப்படம். சுந்தரம் ஹோட்டலில் சர்வராகப் பணி புரிகிறான். ஹோட்டலுக்கு ஒரு பெண் அடிக்கடி வருகிறாள்.  ராதா முதலாளியின் பெண் என்று அவனுக்கு ஆரம்பத்தில் தெரியவில்லை.இவனுடைய அப்பாவித் தனமான பேச்சு அவளுக்குப் பிடித்துப் போகிறது. சிரித்துப் பழகுகிறாள். I like your innocence என்று தான் சொல்கிறாள். அந்த அப்பாவி அவள் தன்னைக் காதலிப்பதாக நம்புகிறான். சந்தர்ப்பமும் திறமையும் அவனை ஒரு பெரிய நடிகனாக உயர்த்துகிறது. நட்சத்திர அந்தஸ்து வந்து விடுகிறது. புகழ் பணம் எல்லாவற்றையும் பார்த்து விடுகிறான். சந்தர்ப்பம் வரும் போது ராதாவிடம் காதலைச் சொல்ல எண்ணுகிறான். அந்ந நாளும் வருகிறது.


மிகுதியை வரும் காணொளியில் பார்க்கலாம்.




நாகேஷ் வெறும் நகைச்சுவை நடிகர் மட்டும் அல்ல. பன்முகத் திறமை வாய்ந்தவர். அவருடைய நடிப்பு சில சமயம் நம்மை அழ வைத்து விடும்.


டிக்கன்ஸின் வரிகள் மட்டும் என்ன?








Comments

  1. ஆஹா ஆஹா

    ReplyDelete
  2. Nicely written. Though Nagesh's character is a classic tragic hero archetype, the movie is well balanced with enjoyable comedy by Nagesh with additional support from SV Ranga Rao and Manorama in cameo roles and fantastic music from MSV-TKR duo. Without that it could easily slip into routine pathos or boredom.

    ReplyDelete
  3. அருமையான படப்பதிவு. இதை பழைய கதையோடு தொடர்பு படுத்தி எழுதியது அருமை. ரசிக்க முடிந்தது.

    ReplyDelete
  4. The way you link things and present make it a very enjoyable read. I will try to catch the writing and read sometime.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...