சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய நாவல் A Tale of two Cities. அதில் வரும் ஒரு அத்தியாயத்தின் தலைப்பு The fellow of no delicacy. அவன் தான் ஸிட்னி கார்ட்டன். அவன் ஒரு குறிக்கோளற்ற மனிதன். குடிகாரன். நிம்மதி இழந்து அலையும் ஒரு உயிர். அவனுக்கு லூஸி மானெட்டின் மீது காதல். கனிவும் நல்ல இயல்பும் கூடிய பெண்மை அது. எந்த விதத்திலும் அவன் அவளுக்குத் தகுதியானவன் அல்ல. இதை அறிந்நே இருக்கிறான். அவன் லூஸி மானெட்டைத் தனியே சந்தித்துப் பேசுவதுதான் இந்த அத்தியாயம்.
அவனுடைய கால்கள் அந்த கல் பதித்த நடைபாதையில் பல இரவுகள் நடந்திருக்கின்றன. மது அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்ததில்லை. துக்கத்தில் தான் தள்ளி இருக்கிறது. இலக்கை அறியாதது அவனது கால்கள். விடியும் வரை அவன் நடந்தது உண்டு. தேவாலயங்கள், புராதனமான கட்டிடங்களில் சூரியனின் முதல் கிரணம் விழுகின்ற வரை. படுக்கையில் விழுந்தாலும் உறக்கம் அவனைப் பற்றியது இல்லை. இன்று இரவு அவனது கால்கள் ஒரு இலக்கை அறிகிறது. அது லூஸி மானெட்டின் இல்லம். வீட்டில் விளக்கு எரிகிறது. அவன் உள்ளே நுழைகிறான். அவனது வரவு அறிவிக்கப் படுகிறது. மாடியில் லூஸி மானெட் தனித்து இருக்கிறாள். அவன் உள்ளே நுழைந்து நாற்காலியில் அமர்கிறான். லூஸி மானெட் எதிர்பாராதது இந்த வரவு.
உங்கள் முகம் சரியாக இல்லை. உடலுக்கு ஏதாவது?
எனது வாழ்க்கையும் சரியாக இல்லை. எனது பழக்க வழக்கங்கள் எல்லாமும். உடல் எப்படிச் சரியாக இருக்கும்?
மாற்றிக் கொள்ளலாமே?
காலம் கடந்து விட்டது. இனி வாய்ப்பு இல்லை. நான் கீழே கீழே மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.
முகத்தை அவன் முடிக் கொள்கிறான் கைகள் நடுங்குகின்றன.
மன்னிக்கவும். உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்.
அது உங்களுக்கு உதவுமானால் நான் கேட்கத் தயாராக இருக்கிறேன்.
உங்கள் கருணைக்கு நன்றி. கடவுளின் ஆசி எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்.
இப்படியாக அவர்கள் பேச்சு தொடர்கிறது.
சரியாக வாழாத ஒரு குடிகாரனின் காதலை அவள் ஏற்க முடியாது என்பதை அறிந்தவனாய் அவன் பேசுகிறான். மனதில் உள்ளதை எல்லாம் அவளிடம் கொட்டி விடுகிறான். அவனது நல்ல குணம் அவளுக்குத் தெரிகிறது. அவனுக்காக அவள் மனம் கசிகிறது. எப்படியாவது இந்த நிலையிலிருந்து அவன் மீண்டு வர வேண்டும் என்று விரும்புகிறாள். அவனோ பயனற்ற தனது வாழ்வில் எதுவும் மாறாது என்று அறிந்து இருக்கிறான். ஸிட்னி கார்ட்டன் அவளுக்காக, அவளைச் சேர்ந்தவர்களுக்காக தனது உயிரைத் தரவும் சித்தமாக இருப்பதாகக் கூறுகிறான். என்றும் அவளைத் தன் நினைவில் வைத்துப் போற்றுவேன் என்று சொல்லி விடை பெற்றுக் கொள்கிறான்.
டிக்கன்ஸ் மிகவும் அற்புதமாக இந்தப் பகுதியை எழுதி இருப்பார்.
சர்வர் சுந்தரம் என்று ஒரு திரைப்படம். சுந்தரம் ஹோட்டலில் சர்வராகப் பணி புரிகிறான். ஹோட்டலுக்கு ஒரு பெண் அடிக்கடி வருகிறாள். ராதா முதலாளியின் பெண் என்று அவனுக்கு ஆரம்பத்தில் தெரியவில்லை.இவனுடைய அப்பாவித் தனமான பேச்சு அவளுக்குப் பிடித்துப் போகிறது. சிரித்துப் பழகுகிறாள். I like your innocence என்று தான் சொல்கிறாள். அந்த அப்பாவி அவள் தன்னைக் காதலிப்பதாக நம்புகிறான். சந்தர்ப்பமும் திறமையும் அவனை ஒரு பெரிய நடிகனாக உயர்த்துகிறது. நட்சத்திர அந்தஸ்து வந்து விடுகிறது. புகழ் பணம் எல்லாவற்றையும் பார்த்து விடுகிறான். சந்தர்ப்பம் வரும் போது ராதாவிடம் காதலைச் சொல்ல எண்ணுகிறான். அந்ந நாளும் வருகிறது.
மிகுதியை வரும் காணொளியில் பார்க்கலாம்.
நாகேஷ் வெறும் நகைச்சுவை நடிகர் மட்டும் அல்ல. பன்முகத் திறமை வாய்ந்தவர். அவருடைய நடிப்பு சில சமயம் நம்மை அழ வைத்து விடும்.
டிக்கன்ஸின் வரிகள் மட்டும் என்ன?
ஆஹா ஆஹா
ReplyDeleteநன்றி
DeleteNicely written. Though Nagesh's character is a classic tragic hero archetype, the movie is well balanced with enjoyable comedy by Nagesh with additional support from SV Ranga Rao and Manorama in cameo roles and fantastic music from MSV-TKR duo. Without that it could easily slip into routine pathos or boredom.
ReplyDeleteThanks Cheenu
Deleteஅருமையான படப்பதிவு. இதை பழைய கதையோடு தொடர்பு படுத்தி எழுதியது அருமை. ரசிக்க முடிந்தது.
ReplyDeleteThank you Ram for reading
DeleteThe way you link things and present make it a very enjoyable read. I will try to catch the writing and read sometime.
ReplyDeleteThank you Janani
Delete