மாயையைப் பழித்தல்
உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?
மாயையே-மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வதும்
ஒன்றுண்டோ !-மாயையே!
எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே-நீ
சித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ?-மாயையே!
என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே!-நான்
உன்னைக் கெடுப்பது உறுதியென்றே
உணர்-மாயையே!
சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே!-இந்தத்
தேகம் பொய் யென்றுணார் தீரரை யென்
செய்வாய்!-மாயையே!
இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்ப
மாயையே!-தெளிந்
தொருமை கண்டார் முன்னம் ஓடாது
நிற்பையோ?-மாயையே!
நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே-சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை-மாயையே!
என்னிச்சை கொண்டுனை யெற்றி விட
வல்லேன் மாயையே!-இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண்-மாயையே!
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே!-உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை-மாயையே!
பாரதியின் கவிதைகளில் நான் விரும்பிப் படிக்கும் கவிதைகளில் மேலே கண்ட கவிதையும் ஒன்று. பாரதியின் பாடல்கள் கர்நாடக இசைக் கச்சேரிகளில் பாடப்படுவது உண்டு. சிலர் சின்னஞ் சிறு கிளியை அழைத்து மேனி சிலிர்ப்பார்கள். சிலர் ஆசை முகம் மறந்து தவிப்பார்கள். மேலே சொன்ன பாடலை யாரும் பாடி நான் கேட்டு அறியேன்.
சமீபத்தில் தஞ்சாவூர் கல்யாணராமன் என்ற கர்நாடக இசைப் பாடகரின் சங்கீதத்தைக் கேட்டேன். யாரும் பாடாத அரிய ராகங்களில் பாடியிருப்பதை அறிந்தேன். இத்தனை நாட்களாக இவரைக் கேட்காமல் போனதை எண்ணி வருந்தினேன். ஜி.என்.பி. யின் சீடர். குருவே இவரது நுட்பமான இசை அறிவைக் கண்டு வியந்திருக்கிறார்.
உண்மை அறிந்தவர் என்ற பாரதியின் பாடலைக் கல்யாணராமன் அவர்கள் பாடிய விதத்தைக் கேளுங்கள்.
'Kanda Naal Mudhalai' by TKS is my favorite. Came to know about TKS from one of the interviews - may be with Sanjay Subramanian. YouTube has been a big source for old masters and songs - look for channel of one 'Raju Ashokan' - he has a good collection.
ReplyDelete-Cheenu
Ok I shall look for Raju Ashokan.
DeleteI have heard Sudha singing Kanda nal mudhal. TK's rendition is different
இவருடைய பாட்டு கேட்டேன். ரசித்தேன். சஞ்சய் சுப்ரமணியன் கூட இவரைப்பற்றி on the note ல் சொன்ன ஞாபகம். பதிவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம்
Delete