Skip to main content

வாராய் குண்டலகேசி

 ஐம்பெருங் காப்பியங்கள் யாவை? இது சாதாரணமாகப் பள்ளிப் பருவத்தில் நாம் எதிர்கொள்ளும் கேள்வி. அதற்குப் படித்துப் பதிலும் எழுதி இருக்கிறோம். பள்ளிப் பாடத்தில் சிலப்பதிகாரக் காப்பியத்தின் வழக்காடு காதை வந்திருக்கிறது. நங்காய், கள்வனைக் கோறல் கடுங்கோலன்று, வெண்வேற்கொற்றம் காண் என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது. எனது சகோதரி சீவக சிந்தாமணி படித்ததாக நினைவு. பின்னுமொரு சகோதரிக்கு மணிமேகலை பாடமாக வந்திருக்கிறது. காயசண்டிகையின் யானைப்பசி என்னும் நோயை மணிமேகலையின் அமுதசுரபி தீர்த்து வைக்கும். ஆனால் குண்டலகேசி, வளையாபதி போன்ற காப்பியங்களின் பாடல்கள் அறிந்து கொண்டதே இல்லை. அதாவது பாடப்பகுதி மூலம் அறிமுகமாகி மேலும் விரிவாகத் தன் முயற்சியில் அறிந்து கொள்ள வாய்க்கவே இல்லை.


நண்பர் செளந்தர் குண்டலகேசியின் ஒரு பாடலைச் சில வருடங்களுக்கு முன் சொன்னார். அந்தப் பாடல் வருமாறு


பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்

காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்

மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி

நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ


இந்தப் பாடல் என்னை வியக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்தது. என்னை மேற்கொண்டு குண்டலகேசியின் பாடல்களைத் தேடவும் வைத்தது. சொற்ப பாடல்களே எஞ்சியிருப்பது தெரிந்தது. வருகின்ற பாடல்கள் எனக்குப் பிடித்தமானதாக இருந்தது.



மறிப மறியும் மலிர்ப மலிரும்

பெறுப பெறும் பெற்றுஇழப்ப இழக்கும்

அறிவது அறிவார் அழுங்கார் உவவார்

உறுவதும் உறும் என்று உரைப்பது நன்று


மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டதே அன்று வாய்மை

நண்ணினார் திறத்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகா

விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த விழுமியோன் நெற்றி போழ்ந்த

கண்ணுளான் கண்டம் தன்மேல் கறையை யார் கறையன்று என்பார்?


முதல் பாடல் வருவது வந்தே தீரும் என்ற தெளிவைத் தந்தது. இரண்டாவது பாடல் நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பதை நினைவுபடுத்தியது. 


குண்டலகேசி என்ற காப்பியத்தின் கதை சுவாரசியமாக இருந்தது. அமைச்சரின் மகள் ஒரு கள்வன் கொலைக்களத்துக்கு இழுத்துச் செல்வதை மாளிகை உப்பரிகையிலிருந்து பார்க்கிறாள். கண்டவுடன் அவன் மேல் மோகம் கொள்கிறாள். தந்தையிடம் சென்று அவனை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என்று கோருகிறாள். மேலும் அவனையே மணப்பேன் என்று உறுதிபடக் கூறுகிறாள். தந்தையும் அரசனிடம் பேசி கள்வனை விடுவிக்கிறார். மகளின் விருப்பப்படியே அவனுக்கே மணம் செய்து தருகிறார். சிறிது காலம் அவர்கள் வாழ்க்கை இன்பமாகக் கழிகிறது. ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் போது 

அவள் விளையாட்டாக அவனே நீ கள்வன் அல்லவா என்று சொல்லி விடுகிறாள். இது அவன் மனதைத் தைக்கிறது. இவளை எப்படியாவது பழி தீர்க்க எண்ணுகிறான். நேர்த்திக் கடன் கழிக்க வேண்டும் என்று தந்திரமாகப் பேசி அவளை மலை உச்சிக்கு இட்டுச் செல்கிறான். முகத்தில் கடுமையேற நகைகளைக் கழட்டிக் கொடு, நான் உன்னை மலையச்சியுச்சியிலிருந்து தள்ளிக் கொல்லுவேன என்கிறான். அவள் அதிர்ச்சியடைகிறாள். சமாளித்துக் கொண்டு சாவதற்கு முன் அவனை மூன்று முறை வலம் வர அனுமதி கோருகிறாள். அவனும் சம்மதிக்கிறான். மூன்றாவது முறை வலம் வரும் போது அவன் எதிர்பாராத வகையில் அவனை மலை உச்சியிலிருந்து தள்ளி விடுகிறாள். தலையைப் பனை மட்டையால் மழித்துக் கொண்டு சமணத் துறவியாகி விடுகிறாள். சிறிது காலம் சென்ற பின் கூந்தல் குண்டலம் போலச் சுருண்டு வளர்கிறது. அதனால் குண்டலகேசி ஆகிறாள். ஒரு முறை வாதத்தில் புத்தத் துறவியிடம் தோற்றுப் போகிறாள். அதன் விளைவாகப் புத்த மதத்தைத் தழுவுகிறாள். இப்படிச் செல்கிறது குண்டலகேசியின் கதை.


சிறு வயதில் மந்திரிகுமாரி என்ற திரைப்படத்தின் கதையைச் சித்தியிடம் கேட்டிருக்கிறேன். குறிப்பாக வாராய் நீ வாராய் என்ற பாடல் காட்சி. அது குண்டலகேசியின் கதையில் வருவது  போலவே இருந்தது. சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்தேன். எம்.ஜி.ராம்சந்தர், எஸ்.ஏ.நடராஜன், மாதுரி தேவி, எம்.என்.நம்பியார் முக்கிய வேடமேற்று இருந்தார்கள். எஸ்.ஏ. நடராஜன் களவையும் ஒரு கலையாகக் கண்டவராக நடித்திருந்தார். பகலில் ராஜகுருவின் மகன். இரவில் கள்வன்.இவருடைய நடிப்பு எனக்குப் பிடித்தது. துடிப்பாக இருந்தார். வித்தியாசமான குரல்.நம்பியார் ராஜகுரு. இவர்களுடைய சதி வேலைகளை எதிர்த்துப் போராடும் தளபதி எம். ஜி. ராம்சந்தர். (டைட்டிலில் அப்படித்தான் போட்டிருக்கிறார்கள்).


பாடல் காட்சியைப் பாருங்கள்.








Comments

  1. அருமையானா பதிவு.

    ReplyDelete
  2. நா எங்கியோ படிச்சிருக்கேன். குண்டலகேசிலேர்ந்து சுட்டு எடுத்ததுதான் மந்திரிகுமாரின்னு. நா கு கே யும் படிச்சதில்ல, ம கு வும் பார்த்ததில்ல. அம்மா இந்த பாட்ட ரசிச்சு சொல்லுவா. பாட்டோட முடிவு முக்யமா🤣🤣

    ReplyDelete
    Replies
    1. முழுக்க முழுக்க சுட்டதுன்னு சொல்ல முடியாது. கள்வனுக்கும் அமைச்சர் பெண்ணுக்கும் காதல். அந்த One liner

      Delete
  3. சமீபத்தில் தமிழருவி மணியன் பேச்சு கேட்டேன். அதில் உ வே சா தேடிக் கண்டுபிடித்த காப்பியம் குண்டலகேசி என்றும் அதில் 17 பாடல்கள் கிடைத்தன என்றும் சொன்னார்.இந்த பாடல் திருச்சி லோகநாதன் ஜிக்கி பாடியது. காலத்தால். அழியாத பாடல். பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி படித்துவிட்டு எழுதியதற்கு

      Delete
  4. The above comment sent by me

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...