Skip to main content

அச்சமில்லை

 வெகுஜன திரைப்படத்தாருக்கும் சில சமயம் சிகப்பின் மீது ஒரு பிடிப்பு வருவது உண்டு. அது சினிமாவுக்கு வைக்கும் தலைப்போடு முடிந்து விடும். அது எண்பதுகளின் காலம். வறுமையின் நிறம் சிவப்பு என்று ஒரு படம் வந்தது. சிவப்பு சரியா இல்லை சிகப்புதானா என்று ஒரு விவாதம் நண்பர்களுக்கு இடையே அப்போது நடந்தது. அது குமாஸ்தா வேலைக்கு முண்டியடிக்கும் காலம். அதை இந்தத் திரைப்படம் முன் வைக்கும். புது டெல்லி கதைக்களம். டில்லியே பார்த்து அறியாதவர்களுக்கு அது ஒரு புதுமை. சிறிது இடைவெளிக்குப் பின் பாரதியின் பாடல்கள் இந்தப் படத்தில் ஒலித்தது.




இந்தப் படத்தின் நாயகன் கமலஹாசன். தத்துவத்தில் பட்டதாரி.வேலை கிடைக்கவில்லை. பாரதியைப் பிடிக்கும் அவனுக்கு. அவர் பாடல்களை அவ்வப்போது எடுத்துச் சொல்வதும் பிடிக்கும்.. அப்பா சங்கீத வித்வான். பல விஷயங்களில் அப்பாவோடு முரண்படுபவன். ஒரு முறை அப்பாவின் தம்பூராவை விற்றுச் செலவழித்து விடுவான். செலவு என்றால் வேலைக்கு விண்ணப்பிக்கும் செலவுதான். மிச்சப் பணத்திற்கு அப்பாவிற்கு திராட்சைப் பழம் வாங்கித் தருவான். இளமையின் செருக்கு நீடாமங்கலத்தைச் சொந்த ஊராகக் கொண்ட சங்கீத வித்வானின் செருக்கோடு உரசும். வித்வான் மகனை வீட்டை விட்டு வெளியேறச் சொல்வார். அவன்தான் ரோஷம் கொண்டவன் ஆயிற்றே. பெட்டியுடன் டில்லிக்குக் கிளம்பி விடுவான். இப்ப சொல்றதுக்குப் பாரதியார் பாட்டு ஒண்ணும் கிடைக்கலையோ. அப்பா மகனைச் சீண்டுவார். மகன் துச்சமாக நம்மை எண்ணித் தூறு செய்த போதிலும் அச்சம் இல்லை அச்சம் அச்சம் இல்லை என்று பாரதியின் வரிகளை உணர்ச்சி பொங்கச் சொல்லியபடியே வெளியேறுவான்.  


டில்லியிலும் வேலை கிடைக்காது. ஒரு கட்டத்தில் அவன் படித்துப் படித்து உணர்ச்சி வேகம் கொண்ட பாரதியின் புத்தகங்களை எடைக்கு விற்க வேண்டிய சூழ்நிலை அவனுக்கு வரும். துயரத்துடன் அதை அவன் நேசிக்கும் பெண்ணிடம் சொல்லுவான்.


இதற்குப் பின் வந்த படங்களில் தளபதி, சமீபத்தில் வந்த அமரன் திரைப்படம் வரை இந்தப் பாடல் காதில் ஒலித்து இருக்கிறது.


ஆங்கிலத்தில் இந்தப் பாடலை ஒரு சமயம் மொழி பெயர்த்தேன்.


Achamillai Achamillai acham enbadu illaye

No fear, No fear, No fear at all,

Even if the sky comes

Crashing down from the top

No fear, No fear, No fear at all

Even if all the people united and up against

No fear, No fear, No fear at all

Scorn poured and vilified

No fear No fear No fear at all

A life seeking alms destined

No fear No fear, No fear at all

All that desired goes away

No fear No fear No fear at all

Damsel throws her eye around

No fear No fear No fear at all

Poison fed by friend dear

No fear No fear No fear at all

Clad in green the army men

In columns even if they rise

No fear No fear No fear at all

Even if the sky comes

Crashing down from the top

No fear No fear No fear at all

Achamillai Achamillai acham enbadhu illaye


அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால், அப்போது சாவும் அங்கே அழிந்து போகும் என்பது பாரதி கண்டு சொன்ன உண்மை.


அச்சமில்லை அச்சமில்லை என்று உச்சரித்தாலே அச்சம் இல்லாது போகும்

அச்சமில்லை நமக்கு என்றுமே தேவையான பாடல்.




Comments

  1. மிகவும் ரசித்த பதிவு.👌 👏 🙏

    ReplyDelete
  2. அந்தப் படத்தில் தீர்த்த கரையினிலேயும் நல்லதோர் வீணையும் லூப்ல கேட்டுண்டே இருக்கலாம். சமீபத்ல அக்னிக் குஞ்சொன்று பாடல் உறியடின்ற படத்ல சூரஜ் சந்தோஷ்ன்ற பையன் பாடினது கேட்டேன். ரொம்ப அருமையா இருந்தது.

    https://youtu.be/c2ax87j10Uk?si=ogyJlYfoSBJaVRBi

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? கேட்கிறேன்

      Delete
  3. மிக அருமையான பதிவு.

    ReplyDelete
  4. நல்ல மொழியாக்கமும் அதற்கான பின்புல விவரங்களும். எவ்வாறு பாரதியின் எழுத்து மரபுக் கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் இடைநிலை பாலம் போலவோ, 1975-85 காலகட்டமும் சோசலிச கொள்கைகளின் பொருளாதார முரண்களுக்கும் 90களில் பின் வந்த தாராளமயமாக்களின் வளர்ச்சிக்கும் இடைநிலைக் காலம். தீர்வு என்னவென்று தெரியாத நேரங்களில் நம்பிக்கை அத்தியாவசமாகிவிடுகிறது. அந்த நம்பிக்கை காலம், இடம் தாண்டி வேறு வேறு சூழ்நிலைகளிலும் பொருந்துகிறது - அதனால்தான் பாரதியின் எழுத்து இன்றும் எழுச்சி ஊட்டுகிறது.

    'ஏழாவது மனிதன்' படத்தில் தொழிற்சங்கம் அமைக்கப்படும் காட்சியில் இந்த பாடம் வரும் என்று நினைக்கிறேன்.

    எம்ஜிஆரின் படங்களில் பாரதியின் எழுச்சிப் பாடல்கள் இடம் பெறவில்லையென்றாலும் பாடல் வரிகள் இதே வகைதான் - சந்திரோதயம் படத்தில் வாலியின் வரிகளில் 'புத்தன் ஏசு காந்தி...' பாடலில்,
    "பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
    இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
    எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
    உண்மை என்பது என்றும் உள்ளது
    தெய்வத்தின் மொழியாகும்
    நன்மை என்பது நாளை வருவது
    நம்பிக்கை ஒளியாகும்...
    புத்தன் ஏசு காந்தி
    பிறந்தது பூமியில் எதற்காக
    தோழா ஏழை நமக்காக" .

    நன்றி நினைவூட்டலுக்கு.
    - சீனு

    ReplyDelete
  5. நன்றி சீனு. பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாய். ஆமாம்.ஏழாவது மனிதன் அச்சமில்லை பாடல் S P B பாடியது. மாறுபட்ட இசை. வைத்தி லட்சுமணன் அல்லவா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...