Skip to main content

நிலவொளியும் காதல் பாட்டும்

 

1976ம் வருடம். கோடை விடுமுறையைக் கழிக்க ஈரோடு சென்றிருந்தேன். சித்தி வீடு அங்கே இருந்தது. அப்போது காற்றில் ஒரு பாடல் தவழ்ந்து வந்தது. அது ‘அன்னக்கிளி ஒன்னத் தேடுது’ என்ற பாடல். பாடலைக் கேட்க கேட்க ஒரு இனம் புரியாத சோகம் மனதைக் கவ்வியது. வில்லியம் வாரட்ஸ்வர்த்தின் The Solitary reaper என்ற கவிதை படித்த போது ஏற்பட்ட அதே உணர்வு. Perhaps the plaintive numbers flow.. என்ற பாதி வரி மட்டும் மனதில் ததும்பிச் சுழன்று கொண்டே இருந்தது. இந்தப் பாட்டு வந்த காலங்களில் காற்றில் தவழ்ந்து காதில் விழுந்தால் தான் உண்டு.  கேட்டுக் கேட்டுப் பாடல் பிரபலமாகும். அதற்குக் கொஞ்சம் நாளாகும்.


இப்போது எல்லாம் பாடல் வெளிவருவதற்கு கூட பெரிதாக விழா எடுக்கிறார்கள். பேசுகிறார்கள். அப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு விடுதலை 2 படத்தின் இசை வெளியீடு நடந்தது. அந்த விவரங்கள் சேகருடைய பகிர்வு மூலம் தெரிந்தது. முதன் முதலாகக் கர்நாடக சங்கீத இசைப் பாடகர் சஞ்சய் சுப்ரமணியன் ஒரு திரைப்பாடல் பாடியிருக்கிறார். மனசுலே மனசுலே என்று துவங்கும் அந்தப் பாடலைக் கேட்கவாம்.



Casablanca என்று ஒரு பழைய திரைப்படம். அதில் As time goes by என்று ஒரு பாடல் வரும். அதில் ஒரு வரி. Moonlight and love song never out of date. 


ஆமாம்.. நிலவொளியும் காதல் பாட்டும் காலாவதி ஆவதில்லை.




Comments

  1. 👌 அருமையான பதிவு. 👏

    ReplyDelete
  2. அருமையான பாட்டு. கேட்க ரீங்காரமாக இருக்கிறது. அன்னககிளி பாடல் பற்றிக்கூட அனுமந்தன்பட்டி வரை நாமிருவரும் நடந்து கொண்டே பேசியதாக நினைவு. ஞானாம்பாள் மேன்ஷன் கீழே டீக் கடையில் விடாமல் பாட்டு ஓடிக் கொண்டே இருக்கும்எத்தனை யோ பாடல்கள் மனதில் பதிந்த நினைவு. நல்ல பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம் நினைவு கூரலுக்கு. மறக்க முடியாத தினங்கள் அவை

      Delete
  3. It was 1976. I think Sridhar's 'Oh Manju' was shown at the Central Theater in Erode when you were there.
    - Cheenu

    ReplyDelete
  4. Correct. 1976 . While typing finger has slipped to 5 intead of 6. Thanks for pointing out. Yes I remember Oh Manju and Thunive thunai

    ReplyDelete
  5. நம்ப மாட்ட, நேத்துதான் நானும் ஈரோடு, அன்னக்கிளி பாட்டு பத்தி எழுதினேன். ஆனா அது மச்சானப் பாத்தீங்களா பத்தி பழய நினைவு. நீ ஈரோடு வந்த போது நான் அங்கு இல்லை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...