1976ம் வருடம். கோடை விடுமுறையைக் கழிக்க ஈரோடு சென்றிருந்தேன். சித்தி வீடு அங்கே இருந்தது. அப்போது காற்றில் ஒரு பாடல் தவழ்ந்து வந்தது. அது ‘அன்னக்கிளி ஒன்னத் தேடுது’ என்ற பாடல். பாடலைக் கேட்க கேட்க ஒரு இனம் புரியாத சோகம் மனதைக் கவ்வியது. வில்லியம் வாரட்ஸ்வர்த்தின் The Solitary reaper என்ற கவிதை படித்த போது ஏற்பட்ட அதே உணர்வு. Perhaps the plaintive numbers flow.. என்ற பாதி வரி மட்டும் மனதில் ததும்பிச் சுழன்று கொண்டே இருந்தது. இந்தப் பாட்டு வந்த காலங்களில் காற்றில் தவழ்ந்து காதில் விழுந்தால் தான் உண்டு. கேட்டுக் கேட்டுப் பாடல் பிரபலமாகும். அதற்குக் கொஞ்சம் நாளாகும்.
இப்போது எல்லாம் பாடல் வெளிவருவதற்கு கூட பெரிதாக விழா எடுக்கிறார்கள். பேசுகிறார்கள். அப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு விடுதலை 2 படத்தின் இசை வெளியீடு நடந்தது. அந்த விவரங்கள் சேகருடைய பகிர்வு மூலம் தெரிந்தது. முதன் முதலாகக் கர்நாடக சங்கீத இசைப் பாடகர் சஞ்சய் சுப்ரமணியன் ஒரு திரைப்பாடல் பாடியிருக்கிறார். மனசுலே மனசுலே என்று துவங்கும் அந்தப் பாடலைக் கேட்கவாம்.
Casablanca என்று ஒரு பழைய திரைப்படம். அதில் As time goes by என்று ஒரு பாடல் வரும். அதில் ஒரு வரி. Moonlight and love song never out of date.
ஆமாம்.. நிலவொளியும் காதல் பாட்டும் காலாவதி ஆவதில்லை.
👌 அருமையான பதிவு. 👏
ReplyDeleteநன்றி மதி
Deleteஅருமையான பாட்டு. கேட்க ரீங்காரமாக இருக்கிறது. அன்னககிளி பாடல் பற்றிக்கூட அனுமந்தன்பட்டி வரை நாமிருவரும் நடந்து கொண்டே பேசியதாக நினைவு. ஞானாம்பாள் மேன்ஷன் கீழே டீக் கடையில் விடாமல் பாட்டு ஓடிக் கொண்டே இருக்கும்எத்தனை யோ பாடல்கள் மனதில் பதிந்த நினைவு. நல்ல பதிவு.
ReplyDeleteநன்றி ராம் நினைவு கூரலுக்கு. மறக்க முடியாத தினங்கள் அவை
DeleteIt was 1976. I think Sridhar's 'Oh Manju' was shown at the Central Theater in Erode when you were there.
ReplyDelete- Cheenu
Correct. 1976 . While typing finger has slipped to 5 intead of 6. Thanks for pointing out. Yes I remember Oh Manju and Thunive thunai
ReplyDeleteநம்ப மாட்ட, நேத்துதான் நானும் ஈரோடு, அன்னக்கிளி பாட்டு பத்தி எழுதினேன். ஆனா அது மச்சானப் பாத்தீங்களா பத்தி பழய நினைவு. நீ ஈரோடு வந்த போது நான் அங்கு இல்லை.
ReplyDeleteஅப்படியா?
Delete