வெகுஜன திரைப்படத்தாருக்கும் சில சமயம் சிகப்பின் மீது ஒரு பிடிப்பு வருவது உண்டு. அது சினிமாவுக்கு வைக்கும் தலைப்போடு முடிந்து விடும். அது எண்பதுகளின் காலம். வறுமையின் நிறம் சிவப்பு என்று ஒரு படம் வந்தது. சிவப்பு சரியா இல்லை சிகப்புதானா என்று ஒரு விவாதம் நண்பர்களுக்கு இடையே அப்போது நடந்தது. அது குமாஸ்தா வேலைக்கு முண்டியடிக்கும் காலம். அதை இந்தத் திரைப்படம் முன் வைக்கும். புது டெல்லி கதைக்களம். டில்லியே பார்த்து அறியாதவர்களுக்கு அது ஒரு புதுமை. சிறிது இடைவெளிக்குப் பின் பாரதியின் பாடல்கள் இந்தப் படத்தில் ஒலித்தது.
இந்தப் படத்தின் நாயகன் கமலஹாசன். தத்துவத்தில் பட்டதாரி.வேலை கிடைக்கவில்லை. பாரதியைப் பிடிக்கும் அவனுக்கு. அவர் பாடல்களை அவ்வப்போது எடுத்துச் சொல்வதும் பிடிக்கும்.. அப்பா சங்கீத வித்வான். பல விஷயங்களில் அப்பாவோடு முரண்படுபவன். ஒரு முறை அப்பாவின் தம்பூராவை விற்றுச் செலவழித்து விடுவான். செலவு என்றால் வேலைக்கு விண்ணப்பிக்கும் செலவுதான். மிச்சப் பணத்திற்கு அப்பாவிற்கு திராட்சைப் பழம் வாங்கித் தருவான். இளமையின் செருக்கு நீடாமங்கலத்தைச் சொந்த ஊராகக் கொண்ட சங்கீத வித்வானின் செருக்கோடு உரசும். வித்வான் மகனை வீட்டை விட்டு வெளியேறச் சொல்வார். அவன்தான் ரோஷம் கொண்டவன் ஆயிற்றே. பெட்டியுடன் டில்லிக்குக் கிளம்பி விடுவான். இப்ப சொல்றதுக்குப் பாரதியார் பாட்டு ஒண்ணும் கிடைக்கலையோ. அப்பா மகனைச் சீண்டுவார். மகன் துச்சமாக நம்மை எண்ணித் தூறு செய்த போதிலும் அச்சம் இல்லை அச்சம் அச்சம் இல்லை என்று பாரதியின் வரிகளை உணர்ச்சி பொங்கச் சொல்லியபடியே வெளியேறுவான்.
டில்லியிலும் வேலை கிடைக்காது. ஒரு கட்டத்தில் அவன் படித்துப் படித்து உணர்ச்சி வேகம் கொண்ட பாரதியின் புத்தகங்களை எடைக்கு விற்க வேண்டிய சூழ்நிலை அவனுக்கு வரும். துயரத்துடன் அதை அவன் நேசிக்கும் பெண்ணிடம் சொல்லுவான்.
இதற்குப் பின் வந்த படங்களில் தளபதி, சமீபத்தில் வந்த அமரன் திரைப்படம் வரை இந்தப் பாடல் காதில் ஒலித்து இருக்கிறது.
ஆங்கிலத்தில் இந்தப் பாடலை ஒரு சமயம் மொழி பெயர்த்தேன்.
Achamillai Achamillai acham enbadu illaye
No fear, No fear, No fear at all,
Even if the sky comes
Crashing down from the top
No fear, No fear, No fear at all
Even if all the people united and up against
No fear, No fear, No fear at all
Scorn poured and vilified
No fear No fear No fear at all
A life seeking alms destined
No fear No fear, No fear at all
All that desired goes away
No fear No fear No fear at all
Damsel throws her eye around
No fear No fear No fear at all
Poison fed by friend dear
No fear No fear No fear at all
Clad in green the army men
In columns even if they rise
No fear No fear No fear at all
Even if the sky comes
Crashing down from the top
No fear No fear No fear at all
Achamillai Achamillai acham enbadhu illaye
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால், அப்போது சாவும் அங்கே அழிந்து போகும் என்பது பாரதி கண்டு சொன்ன உண்மை.
அச்சமில்லை அச்சமில்லை என்று உச்சரித்தாலே அச்சம் இல்லாது போகும்
அச்சமில்லை நமக்கு என்றுமே தேவையான பாடல்.
மிகவும் ரசித்த பதிவு.👌 👏 🙏
ReplyDeleteநன்றி மதி
Deleteஅந்தப் படத்தில் தீர்த்த கரையினிலேயும் நல்லதோர் வீணையும் லூப்ல கேட்டுண்டே இருக்கலாம். சமீபத்ல அக்னிக் குஞ்சொன்று பாடல் உறியடின்ற படத்ல சூரஜ் சந்தோஷ்ன்ற பையன் பாடினது கேட்டேன். ரொம்ப அருமையா இருந்தது.
ReplyDeletehttps://youtu.be/c2ax87j10Uk?si=ogyJlYfoSBJaVRBi
அப்படியா? கேட்கிறேன்
Deleteமிக அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி ராம்
Deleteநல்ல மொழியாக்கமும் அதற்கான பின்புல விவரங்களும். எவ்வாறு பாரதியின் எழுத்து மரபுக் கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் இடைநிலை பாலம் போலவோ, 1975-85 காலகட்டமும் சோசலிச கொள்கைகளின் பொருளாதார முரண்களுக்கும் 90களில் பின் வந்த தாராளமயமாக்களின் வளர்ச்சிக்கும் இடைநிலைக் காலம். தீர்வு என்னவென்று தெரியாத நேரங்களில் நம்பிக்கை அத்தியாவசமாகிவிடுகிறது. அந்த நம்பிக்கை காலம், இடம் தாண்டி வேறு வேறு சூழ்நிலைகளிலும் பொருந்துகிறது - அதனால்தான் பாரதியின் எழுத்து இன்றும் எழுச்சி ஊட்டுகிறது.
ReplyDelete'ஏழாவது மனிதன்' படத்தில் தொழிற்சங்கம் அமைக்கப்படும் காட்சியில் இந்த பாடம் வரும் என்று நினைக்கிறேன்.
எம்ஜிஆரின் படங்களில் பாரதியின் எழுச்சிப் பாடல்கள் இடம் பெறவில்லையென்றாலும் பாடல் வரிகள் இதே வகைதான் - சந்திரோதயம் படத்தில் வாலியின் வரிகளில் 'புத்தன் ஏசு காந்தி...' பாடலில்,
"பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது
நம்பிக்கை ஒளியாகும்...
புத்தன் ஏசு காந்தி
பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக" .
நன்றி நினைவூட்டலுக்கு.
- சீனு
நன்றி சீனு. பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாய். ஆமாம்.ஏழாவது மனிதன் அச்சமில்லை பாடல் S P B பாடியது. மாறுபட்ட இசை. வைத்தி லட்சுமணன் அல்லவா?
ReplyDelete