ஜெயச்சந்திரன் குரலில் ஒரு மென்மை இருக்கும். குழைத்து வைத்த சந்தனம் போல. அவருக்குப் பாடக் கிடைத்த பாடல்கள் எல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. பாடலின் தன்மையைப் புரிந்து கொண்டு உணர்ச்சி கலந்து பாடக் கூடியவர். அதில் கொஞ்சம் கூட மிகை இருக்காது.
மணிப்பயல் என்று ஒரு திரைப்படம். அதில் ஒரு பாடல் தங்கச் சிமிழ் போல் இதழோ என்று. நான் அனேகமாக அப்போது பள்ளி இறுதி வகுப்பில் இருந்தேன். முதன் முதலாகச ஜெயச்சந்நிரனின் குரலைக் கேட்டேன். கிறங்கிப் போனேன். பல முறை வானொலிப் பெட்டியில் கேட்டிருக்கிறேன்.
பின்பு அலைகள் என்று ஒரு படம். ஸ்ரீதர் இயக்கியது. அதில் வரும் பொன்னென்ன பூவென்ன கண்ணே என்று ஒரு பாடல். கேட்டவுடன் பிடித்துப் போயிற்று. ஜெயச்சந்திரன் என்ற பாடகரோடு அவர் குரலையும் மனம் அடையாளம் கொள்ளத் துவங்கியது.
அதற்குப் பிறகு எத்தனை எத்தனை பாடல்கள். அப்பாவுக்குப் பிடித்த சினிமாப் பாடல்கள் மிகச் சிலவே. வியப்பு என்னவென்றால் அதில் இரண்டு பாடல்கள் ஜெயச்சந்திரன் பாடியது. ஒன்று வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள். பிறிதொன்று தாலாட்டுதே வானம்.
ஏக்கம், தனிமை,காதல், இரக்கம் என்று எல்லா உணர்வுகளும் இவர் குரல் இயல்பாகத் தாங்கி வந்திருக்கிறது.
ஜெயச்சந்திரன் பாடல்களைப் பற்றி சேகர் நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தான். சாமத்தில் பூத்த மல்லி என்று ஒரு பாடலை நினைவு படுத்தினான்.
மெய் தான். ஜெயச்சந்திரன் குரல் அப்படித்தான். மேலும் சந்திரனின் தண்மை.
Spb, yesudoss கலந்த குரல். மாஞ்சோலைக் கிளிதானோ, சித்திரச் செவ்வானம்
ReplyDeleteமுன்னவர்களின் குரலைக் கேட்டு மனம் அப்படி நினைக்கும். இது வேறு. இது வேறு கோயில் இது வேறு பூஜை என்று ஜெயச்சந்திரன் பாடிய வரியைத் தான் சொல்ல வேண்டும்
Deleteமுதல் பாடல் கேட்டேன். நல்ல குரல். ரசித்துக் கேட்டேன். சரியான சமயத்தில் நினைவு கூர்ந்து நல்ல பதிவு
ReplyDeleteநன்றி ராம்
DeleteThere can't be a better tribute and homage to one of the finest singers of our times. His songs never get aged and are immortal. There were times when I lost settings for believing it to be of Yesudas'. I would confess, his voice is still refined and mellifluous comparing to that of my all time favourite Yesudas.
ReplyDeleteசரியான நினைவஞ்சலிப் பதிவு. 👌
ReplyDeleteநன்றி மதி
Delete