காந்தியின் வாழ்க்கையை முடித்து வைத்தது மூன்று துப்பாக்கிக் குண்டுகள். பிர்லா மாளிகையில் அவர் உடல் கிடத்தப்பட்டது. கிடத்திய உடல் மேல் அவர் குளிருக்குப் போர்த்தியிருந்த சால்வையை மெல்ல உருவியபோது நழுவி விழுந்தது ஒரு குண்டு. இன்னொன்று அவரது சடலம் முழுதும் எரிந்து சாம்பலைத் திரட்டும் போது கிடைத்தது.
நேரு வானொலியில் உரை நிகழ்த்தினார். எந்த விதத் தயாரிப்பும் இன்றி பொங்கி வரும் உணர்ச்சியில் அவர் செய்த உரை அது. கண்ணீரைக் கட்டுப்படுத்தியபடி உணர்ச்சியில் குரல் நடுங்க அவர் செய்த உரை.
நமது வாழ்வில் இருந்த விளக்கு மறைந்து விட்டது. எங்கும் இருள் சூழ்ந்து விட்டது. என்ன சொல்வது, எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. பாபு என்று நாம் அழைக்கும் நமது அன்புத் தலைவர், தேசத் தந்தை, இன்று நம்மிடையே இல்லை. ஒரு வேளை நான் அப்படிச் சொல்வது தவறாக இருக்கக் கூடும். நாம் அவரை இத்தனை காலம் பார்த்துக் கொண்டிருந்தது போல இனிக் காண முடியாது. ஆலோசனைக்காகவும் ஆறுதல் மொழிக்காகவும் அவரைத் தேடி ஓட முடியாது. அது ஒரு பலத்த அடி. எனக்கு மட்டுமல்ல. நாட்டில் உள்ள கோடிக் கணக்கான மக்களுக்கும் தான். வன்மையாக விழுந்த இந்த அடியை எனது வார்த்தைகளோ மற்ற எவருடைய வார்த்தைகளோ மென்மைப் படுத்திவிட முடியாது.
விளக்கு மறைந்து போனது என்று சொன்னேன். என்றாலும் நான் சொன்னது தவறு தான். இந்த நாட்டிலே ஒளி வீசிய அந்த விளக்கு ஏதோ சாதாரணமான விளக்கு அல்ல. இத்தனை ஆண்டுகள் ஒளி வீசிய அந்த விளக்கு இன்னும் பல ஆண்டுகள் இந்த நாட்டிலே ஒளியேற்றும். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் இந்த நாட்டிலும் உலகத்திலும் அந்த ஒளி காணப்படும். கணக்கில்லாத இதயங்களுக்கு அது ஆறுதல் வழங்கியபடி இருக்கும். அந்த ஒளி ஏதோ நமதருகே கடந்து போனதான ஒன்றைக் குறிக்கவில்லை. அதற்கும் மேலாக வாழும் நிரந்தரமான உண்மையை, சரியான பாதையை, தவறுகளிலிருந்து நம்மை விலக்கி இந்தப் புராதனமான தேசத்தை விடுதலையை நோக்கி இட்டுச் செல்வதைக் குறிப்பதாக இருந்தது.
அவர் செய்ய வேண்டியது எத்தனையோ இருந்த போது இப்படி எல்லாம் நடந்து விட்டது. அவர் தேவையற்றவர் என்றோ அவரது பணிகள் முடிவுற்றது என்றோ நாம் ஒருபோதும் நினைக்க முடியாது. அதிலும் குறிப்பாக இத்தனை சிரமங்களை நாம் சந்திக்கும் இந்நேரத்தில் அவர் நம்மிடையே இல்லை என்பது தாங்க முடியாத பயங்கர அடிதான்.
ஒரு மூடன் அவரது உயிருக்கு முடிவு கட்டிவிட்டான். இப்படிச் செய்தவனை மூடன் என்றுதான் என்னால் சொல்ல முடியும். ஆனாலும் சில மாதங்கள் வருடங்களாக இந்த நாட்டில் ஒரு விஷம் பரவி வருகிறது அது மக்களின் மனதில் சில விளைவுகளை ஏற்படுத்தித் தான் இருக்கிறது…..
இப்படித் தொடர்ந்தது நேருவின் பேச்சு. உணர்வு பூர்வமான ஆனால் பொறுப்பு மிக்க பேச்சாக அது அமைந்திருந்தது.
காந்திக்கு முடிவு நேர்ந்தது. ஒவ்வொரு முடிவும் வேறு ஏதோ ஒன்றின் துவக்கமாகத் தானே ஆகிறது?
Nice Translation ! Gandhi had a strong connection with Madurai - made the momentous sartorial choice there. My very first school excursion trip was to the Gandhi Museum from Meenakshi Vidyasala in my second standard. Recollecting Sarvodaya Ilakya Pannai, Khadi Kraft shop for Deepavali kurta.
ReplyDeleteNice remembrance about Gandhi's Madurai connection. My first visit to Gandhi Museum happened when I was in 6th standard. All the students of my class spent one day in Gandhi Museum.
Deleteஅருமை சந்தானம். He was selectively quoted until sometime back and now even that has stopped. Our leaders feel guilty before his towering personality. I had a chance to read his சத்திய சோதனை recently - and with age we tend to more understand what is shared over there.
ReplyDeleteHis life was his message. The message was understood by few. Misinterpreted by many.
DeleteHate was not what he taught.