காதல் கடிது
கொப்பும் கிளையுமாக நெடிது
வளர்ந்திருந்தது அந்த மரம்
பச்சை இலைகளோடு ஒரு செழுமை அதனைச் சூழ்ந்திருந்தது
கனிகளைத் தாங்கியபடி ஒரு தனி அழகு கொண்டு விளங்கியது
நான் அதைப் பார்த்து பார்த்துப் பரவசம் கொண்டேன்
என் காதலை ஒரு நாள் இல்லை ஒரு நாள்
சொல்லி விட வேண்டும் என்று எண்ணியிருந்தேன்
அதற்கான தனிமை வாய்க்காமலே இருந்தது
ஒரு நாள் மழை பெய்தது.
மரத்தின் மேனி எல்லாம் நனைந்து போனது
இலைகள் எல்லாம் பளபளத்தது
ஒரு அற்புதமான அழகுடன் மரம் இருந்தது.
மழை விட்டதும் நான் மெல்ல அதனிடம் சென்றேன்
என்னுடைய காதலைச் சொன்னேன்
மரம் மறுமொழி ஏதும் சொல்ல வில்லை.
லேசாகக் காற்று வீசியது
இலைகளில் தங்கியிருந்த மழைத் துளிகளை மட்டும் என் மேல் தெளித்து விட்டு
சும்மா இருந்தது
மரம் நகராது
நான் நகர்ந்து விடக் கூடியவன்
அது மரத்துக்கும் தெரிந்திருந்தது
ஏற்கப் படாத காதல் எனக்குள்ளே காலம் முழுவதும் இருந்தது
தி சந்தானம்
இலைகளின் அசைவும், மழைத் துளியின் தூவலும்தான் ரெஸ்பான்ஸ்.🙂🙂
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅழகா எழுதி இருக்க.❤
ReplyDeleteநன்றி
Delete👌 அருமை 👏
ReplyDeleteநன்றி மதி
Deleteஅருமையான கவிதை. ரசித்தேன்
ReplyDeleteநன்றி ராமநாதன்
Deleteநகராமல் இருத்தல் மரத்தின் காதலுக்கு தேவை.
ReplyDeleteஇருக்கலாம். நகராத ஒன்றுக்கு நகரும் ஒருவனோடு எங்ஙனம் நேசம் வாய்க்கும்?
Deleteநன்றாக உள்ளது சந்தானம்!
ReplyDeleteமரத்தின் வழி செய்தி என்ன?
உறவுகள் செழித்தாலும் - எல்லா காதலும் வெற்றி பெறுவதில்லை! பசுமையான நினைவுகளை விட்டு செல்கின்றன! மனம் எவ்வளவு காலமாகினும் அசை போடுவதை நிறுத்துவதில்லை!
நீ ஒரு கவி அல்லவா? புறம் ஒன்று வைத்து உள்ளொன்று பேசுவாய் தானே?
Deleteநீ, 'கங்கை நதியோரம் ராமன் நடந்தான், கன்னி மணி சீதை தானும் தொடர்ந்தாள்' என எதிர் பார்த்தால், மரமோ 'மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்' என்று எசப்பாட்டு பாடுகிறது :)
ReplyDelete- சீனு
😊
Delete"...கண்ணின் மணி சீதை..." என்று இருக்க வேண்டும்
ReplyDeleteஅப்படி தொடர்ந்து வந்தா,....🤣🤣
Deleteஇலையும் கனியும் என்று செழித்து வளர்ந்திருக்கும் மரம். தன்னளவில் நிறைவு கொண்டு எந்தப் பெருமையும் இன்றி அசையாத தியான நிலையில் இருக்கிறது. இன்னொன்று அலையும் மனமும் அவசரமும் வேட்கையும் கொண்டு நகரும் நிலையில் இருக்கிறது. இது இரண்டு வேறுபட்ட நிலைகள். நகரவே செய்யாத ஒன்று தொடர்வதோ அலைவதே மொருளாகக் கொண்ட ஒன்று நிலை பெற நிற்பதோ சாத்தியம் ஆவதில்லை.
Deleteஜெயந்தி கவனமாகப் படிக்கவும். குயில் பாட்டு எழுதிய பாரதி ஆற்ற தமிழ்ப் புலவர்களை விளித்து வேதாந்தமாக விரித்துப் பொருள் கொள்ளச் சொன்னது ஏனென்று புரியும்😊
ReplyDeleteஅச்சோ புரிஞ்சது. என்னோட கமெண்ட்ஸ் சும்மா கலாட்டாக்கு.
Delete//ஆன்ற தமிழ்ப் புலவர்கள்//
ReplyDelete//ஆன்ற தமிழ்ப் புலவர்கள்//
ReplyDelete