Skip to main content

காதல் கடிது





 காதல் கடிது


கொப்பும் கிளையுமாக நெடிது

வளர்ந்திருந்தது அந்த மரம்

பச்சை இலைகளோடு ஒரு செழுமை அதனைச் சூழ்ந்திருந்தது

கனிகளைத் தாங்கியபடி ஒரு தனி அழகு கொண்டு விளங்கியது

நான் அதைப் பார்த்து பார்த்துப் பரவசம் கொண்டேன்

என் காதலை ஒரு நாள் இல்லை ஒரு நாள்

சொல்லி விட வேண்டும் என்று எண்ணியிருந்தேன்

அதற்கான தனிமை வாய்க்காமலே இருந்தது

ஒரு நாள் மழை பெய்தது.

மரத்தின் மேனி எல்லாம் நனைந்து போனது

இலைகள் எல்லாம் பளபளத்தது 

ஒரு அற்புதமான அழகுடன் மரம் இருந்தது.

மழை விட்டதும் நான் மெல்ல அதனிடம் சென்றேன்

என்னுடைய காதலைச் சொன்னேன்

மரம் மறுமொழி ஏதும் சொல்ல வில்லை.

லேசாகக் காற்று வீசியது

இலைகளில் தங்கியிருந்த மழைத் துளிகளை மட்டும் என் மேல் தெளித்து விட்டு

சும்மா இருந்தது

மரம் நகராது

நான் நகர்ந்து விடக் கூடியவன்

அது மரத்துக்கும் தெரிந்திருந்தது

ஏற்கப் படாத காதல் எனக்குள்ளே காலம் முழுவதும் இருந்தது


தி சந்தானம்


Comments

  1. இலைகளின் அசைவும், மழைத் துளியின் தூவலும்தான் ரெஸ்பான்ஸ்.🙂🙂

    ReplyDelete
  2. அருமையான கவிதை. ரசித்தேன்

    ReplyDelete
  3. நகராமல் இருத்தல் மரத்தின் காதலுக்கு தேவை.

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம். நகராத ஒன்றுக்கு நகரும் ஒருவனோடு எங்ஙனம் நேசம் வாய்க்கும்?

      Delete
  4. நன்றாக உள்ளது சந்தானம்!
    மரத்தின் வழி செய்தி என்ன?
    உறவுகள் செழித்தாலும் - எல்லா காதலும் வெற்றி பெறுவதில்லை! பசுமையான நினைவுகளை விட்டு செல்கின்றன! மனம் எவ்வளவு காலமாகினும் அசை போடுவதை நிறுத்துவதில்லை!

    ReplyDelete
    Replies
    1. நீ ஒரு கவி அல்லவா? புறம் ஒன்று வைத்து உள்ளொன்று பேசுவாய் தானே?

      Delete
  5. நீ, 'கங்கை நதியோரம் ராமன் நடந்தான், கன்னி மணி சீதை தானும் தொடர்ந்தாள்' என எதிர் பார்த்தால், மரமோ 'மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்' என்று எசப்பாட்டு பாடுகிறது :)
    - சீனு

    ReplyDelete
  6. "...கண்ணின் மணி சீதை..." என்று இருக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அப்படி தொடர்ந்து வந்தா,....🤣🤣

      Delete
    2. இலையும் கனியும் என்று செழித்து வளர்ந்திருக்கும் மரம். தன்னளவில் நிறைவு கொண்டு எந்தப் பெருமையும் இன்றி அசையாத தியான நிலையில் இருக்கிறது. இன்னொன்று அலையும் மனமும் அவசரமும் வேட்கையும் கொண்டு நகரும் நிலையில் இருக்கிறது. இது இரண்டு வேறுபட்ட நிலைகள். நகரவே செய்யாத ஒன்று தொடர்வதோ அலைவதே மொருளாகக் கொண்ட ஒன்று நிலை பெற நிற்பதோ சாத்தியம் ஆவதில்லை.

      Delete
  7. ஜெயந்தி கவனமாகப் படிக்கவும். குயில் பாட்டு எழுதிய பாரதி ஆற்ற தமிழ்ப் புலவர்களை விளித்து வேதாந்தமாக விரித்துப் பொருள் கொள்ளச் சொன்னது ஏனென்று புரியும்😊

    ReplyDelete
    Replies
    1. அச்சோ புரிஞ்சது. என்னோட கமெண்ட்ஸ் சும்மா கலாட்டாக்கு.

      Delete
  8. //ஆன்ற தமிழ்ப் புலவர்கள்//

    ReplyDelete
  9. //ஆன்ற தமிழ்ப் புலவர்கள்//

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...