I
இரவு எங்கும் விரிந்திருந்தது
மரத்தின் கிளைகள் உயர்ந்து இருந்தது
இலைகள் உதிர்ந்த கிளைகளின் ஊடாக நிலவு தெரிந்தது
பேரிருள் சிறு வெளிச்சத்தைத் தழுவிக் கிடந்தது
நிலவில் சிறு களங்கம் ஏறி இருந்தது
நிலவு சற்றே மங்கியது போல் இருந்தது
“நிலவுக்குப் பின்னால் நிழல் இருக்கிறது
நிழலுக்குப் பின்னால் என்ன இருக்கிறது?”
என்று அவளிடம் கேட்டேன்.
சுடர் போலப் புன்னகை சிந்தினாள்
பின்னும் முகத்தில் அருள் காட்டினாள்
மோகமது தீர்ந்த பாடில்லை
II
ஒரு நாள் கனவில் யமுனா வந்தாள்
பாதம் வாழை இலைக் குருத்தைப் போலப் பொலிந்தது
அவள் கழுத்தைச் சுற்றியிருந்த புடவையில்
சுட்டி சுட்டியாக ஈரம்
சோப்பு போட்டு அலம்பிய முகம்
துடைத்து விட்ட பளிங்குக் கல் போல இருந்தது
நெற்றியில் பொட்டு இல்லை.
நான் பாபுவைப் பற்றிக் கேட்டு இருக்கக் கூடாது
யமுனாவின் தலை குனிந்தது
அவள் முகம் கடுத்தது போலிருந்தது
நிமிர்ந்த போது சர்க்கரை போடாத நன்றாகக் காய்ச்சாத பால் போல ஒரு புன்னகை தவழ்ந்தது
வேண்டாம் என்று மட்டுமே சொன்னாள்
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை
III
ஞானக்கூத்தன் என்னோடு அலைபேசியில் தொடர்பு கொண்டார்
நரசிம்மன் என்ற கோயில் பரிசாரகர் தனது
முதல் கவிதையை அச்சிட்டதைச் சொன்னார்.
தெரியுமே என்று சொன்னேன்
ஞானாட்சரியின் வீணை இசை நின்று போனதைச் சொன்னார்
பின்பு நெடு நேரம் சிரித்தார்
பிறகு ஞானாட்சரியைத் தான் மறந்து விட்டதாகச் சொன்னார்
சரிதான் என்றேன் நானும்
தி சந்தானம்
//சர்க்கரை போடாத நன்றாக காய்ச்சாத பால்// ஆஹா.
ReplyDeleteஇப்ப யமுனா, பாபுலாம் மறுபடி படிக்கனும்போல இருக்கே,..
இப்ப வாசிப்பில் எம் டி வி யோட இரண்டாம் இடம். அருமையாக இருக்கு. படிக்கலேன்ன படி
படிக்கிறேன்
Deleteயமுனாவைப் பார்த்ததும் பேசக் கூட வாய் வந்ததா🙂🙂
ReplyDeleteகனவில் தோற்றங்கள் நிழல் போல வருகிறது. பேசுவது போல ஏதோ நடக்கிறது. அதுவும் தெளிவில்லை
Deleteநீ மஹா ரசிகன். உன் ரசிப்பு எங்களுக்கு ரசனையாக இருக்கு.
Deleteஅருமை ! நித்திரைக்கும் நினைவுகளுக்கும் இடையில் பரவலாய் மிதக்கும் எண்ணங்கள் அங்கங்கே மேக குழுமங்கள் போல் கடந்து செல்வதைப் போல.
ReplyDelete- சீனு
ஆஹா! பாதி விழிப்பு மீதி உறக்கம் மேகம் போல நழுவிச் செல்லும் எண்ணங்கள். மங்கிய நிலவில் ஒரு கனவு பாரதி. யமுனா, தி.ஜா வின் கதாபாத்திரம் பிறகு ஞானக்கூத்தனும் ஞானாட்சரியும்..
Deleteஅருமையான கவிதை. மிகவும் ரசித்து எழுதினாற் போல் தெரிகிறது. நிதானம். வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராமனாதன். சில சமயம் ரசனையின் கையிருப்பு கரைந்து போவது போல இருக்கிறது
Deleteகரைந்து போக வாய்ப்பில்லை உனக்கு. வாழ்நாள் ஸ்டாக் இருக்கு உன்னிடம்.
Deleteசரிதான்
Deleteஅருமை. எப்போதும் போல் உன்னுடைய ரசனை பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி மதி
Delete