Skip to main content

மோகக் குழப்பம்

                                 I



இரவு எங்கும் விரிந்திருந்தது


மரத்தின் கிளைகள் உயர்ந்து இருந்தது


இலைகள் உதிர்ந்த கிளைகளின் ஊடாக நிலவு தெரிந்தது


பேரிருள் சிறு வெளிச்சத்தைத் தழுவிக் கிடந்தது


நிலவில் சிறு களங்கம் ஏறி இருந்தது


நிலவு சற்றே மங்கியது போல் இருந்தது


“நிலவுக்குப் பின்னால் நிழல் இருக்கிறது

நிழலுக்குப் பின்னால் என்ன இருக்கிறது?”

என்று அவளிடம் கேட்டேன்.


சுடர் போலப் புன்னகை சிந்தினாள் 


பின்னும் முகத்தில் அருள் காட்டினாள் 

மோகமது தீர்ந்த பாடில்லை 



                                 II


ஒரு நாள் கனவில் யமுனா வந்தாள்


பாதம் வாழை இலைக் குருத்தைப் போலப் பொலிந்தது


அவள் கழுத்தைச் சுற்றியிருந்த புடவையில் 

சுட்டி சுட்டியாக ஈரம்


சோப்பு போட்டு அலம்பிய முகம்

துடைத்து விட்ட பளிங்குக் கல் போல இருந்தது

நெற்றியில் பொட்டு இல்லை.


நான் பாபுவைப் பற்றிக் கேட்டு இருக்கக் கூடாது


யமுனாவின் தலை குனிந்தது 


அவள் முகம் கடுத்தது போலிருந்தது


நிமிர்ந்த போது சர்க்கரை போடாத நன்றாகக் காய்ச்சாத பால் போல ஒரு புன்னகை தவழ்ந்தது 


வேண்டாம் என்று மட்டுமே சொன்னாள்


எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை 


                                III


ஞானக்கூத்தன் என்னோடு அலைபேசியில் தொடர்பு கொண்டார்


நரசிம்மன் என்ற கோயில் பரிசாரகர் தனது 

முதல் கவிதையை அச்சிட்டதைச் சொன்னார்.


தெரியுமே என்று சொன்னேன்


ஞானாட்சரியின் வீணை இசை நின்று போனதைச் சொன்னார்


பின்பு நெடு நேரம் சிரித்தார்


பிறகு ஞானாட்சரியைத் தான் மறந்து விட்டதாகச் சொன்னார்


சரிதான் என்றேன் நானும்


தி சந்தானம்



Comments

  1. //சர்க்கரை போடாத நன்றாக காய்ச்சாத பால்// ஆஹா.
    இப்ப யமுனா, பாபுலாம் மறுபடி படிக்கனும்போல இருக்கே,..

    இப்ப வாசிப்பில் எம் டி வி யோட இரண்டாம் இடம். அருமையாக இருக்கு. படிக்கலேன்ன படி

    ReplyDelete
  2. யமுனாவைப் பார்த்ததும் பேசக் கூட வாய் வந்ததா🙂🙂

    ReplyDelete
    Replies
    1. கனவில் தோற்றங்கள் நிழல் போல வருகிறது. பேசுவது போல ஏதோ நடக்கிறது. அதுவும் தெளிவில்லை

      Delete
    2. நீ மஹா ரசிகன். உன் ரசிப்பு எங்களுக்கு ரசனையாக இருக்கு.

      Delete
  3. அருமை ! நித்திரைக்கும் நினைவுகளுக்கும் இடையில் பரவலாய் மிதக்கும் எண்ணங்கள் அங்கங்கே மேக குழுமங்கள் போல் கடந்து செல்வதைப் போல.
    - சீனு

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! பாதி விழிப்பு மீதி உறக்கம் மேகம் போல நழுவிச் செல்லும் எண்ணங்கள். மங்கிய நிலவில் ஒரு கனவு பாரதி. யமுனா, தி.ஜா வின் கதாபாத்திரம் பிறகு ஞானக்கூத்தனும் ஞானாட்சரியும்..

      Delete
  4. அருமையான கவிதை. மிகவும் ரசித்து எழுதினாற் போல் தெரிகிறது. நிதானம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமனாதன். சில சமயம் ரசனையின் கையிருப்பு கரைந்து போவது போல இருக்கிறது

      Delete
    2. கரைந்து போக வாய்ப்பில்லை உனக்கு. வாழ்நாள் ஸ்டாக் இருக்கு உன்னிடம்.

      Delete
  5. அருமை. எப்போதும் போல் உன்னுடைய ரசனை பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...