மரணம் தழுவுகின்ற இறுதிக் கணம். நேருவின் படுக்கைக்கு அருகே ஒரு கவிதைப் புத்தகம் இருந்தது. அது ராபர்ட் ஃப்ராஸ்ட் என்ற அமெரிக்கக் கவிஞனின் கவிதைத் தொகுப்பு. Stopping by the woods என்று ஒரு கவிதை. அதன் இறுதி வரிகள் நேருவால் அடிக்கோடு இடப்பட்டு இருந்தது. அந்த வரிகள்
The woods are lovely, dark and deep
But I have promises to keep
And miles to go before I sleep,
And miles to go before I sleep
நேருவின் மனம் நுட்பமானது. அவருக்கு வாய்த்தது கவி மனம். இயற்கை சார்ந்த ரசனை, தத்துவ விசாரம், உலகளாவிய பார்வை இவை எல்லாம் அவருக்கு இருந்தது. அவர் நிறையப் படித்தார். படிப்பு அவரது எழுத்தைச் செழுமைப் படுத்தியது. நிறைய எழுதினார். சிறை வாழ்க்கை அதற்கு உதவியது. காச நோயாளியான தனது மனைவிக்கு Pearl S Buck எழுதிய The Good Earth என்ற புத்தகத்தைப் படித்துக் காட்டும் மனிதராக அவர் இருந்தார்.
இன்று ராபர்ட் ஃப்ராஸ்டின் சில கவிதைகள் படிக்கக் கிடைத்தது. ஆங்கில மூலத்தையும் தமிழில் அதைச் செய்ததையும் கீழே தந்திருக்கிறேன்.
Nothing new
One moment when the dust to-day
Against my face was turned to spray,
I dreamed the winter dream again
I dreamed when I was young at play,
Yet strangely not more sad than then—
Nothing new—
Though I am further upon my way
The same dream again.
—Robert Frost (1874-1963)
ஓன்றும் புதிதல்ல
ஒரு கணம் இன்று முகத்தில் தூசு மோதி ஒரு துவலை போல மாறிய போது
குளிர்காலக் கனவினை நான் மறுபடியும் கண்டேன்
இளமையிலே விளையாட்டில் கண்டிருந்த அதே கனவு
வினோதம்
அப்போது இருந்ததை விட ஒன்றும் அதிகம் துயரம் இல்லை
ஒன்றும் புதிது அல்ல
அதே வழி நான் செல்வது
அதே கனவு பின்னும்
Dust of snow
The way that crow
Shook down on me
The dust of snow
From a hemlock tree
Has given my heart
A change of mood
And saved some part
Of a day I had rued.
Robert Frost
பனித் துகள்
ஹெம்லாக் மரத்திலிருந்த பனித் துகளை
அந்தக் காகம் என் மேல் உதறிய விதம்
என் மனநிலையை மாற்றியது
நான் விசனம் கொண்ட தினத்தின்
ஒரு பகுதியைக் காப்பாற்றித் தந்தது
Fire and Ice
Some say the world will end in fire,
Some say in ice.
From what I’ve tasted of desire
I hold with those who favor fire.
But if it had to perish twice,
I think I know enough of hate
To say that for destruction ice
Is also great
And would suffice.
நெருப்பும் பனிக்கட்டியும்
சிலர் சொல்கிறார்கள்
இந்த உலகம் நெருப்பினால் முடிந்து போகும் என்று
சிலர் சொல்கிறார்கள் அது பனிக்கட்டியால் என்று
நான் ஆசையை ருசி
பார்த்திருக்கிறேன்
எனவேதான் நெருப்பை ஆதரிப்பவர் பக்கம் இருக்கிறேன்
ஆனால் இரண்டு முறை மடிந்து போக எனக்கு வாய்த்தால்
வெறுப்பைப் பற்றிப் போதுமான அளவு தெரிந்திருந்தால்
இந்த உலகத்தை அழிப்பதற்கு பனிக்கட்டியே சிறந்தது என்று சொன்னால்..
அதுவும் கூட சரி தான்.
தமிழில்
தி சந்தானம்
உன் தந்தை சொன்னதாக எனக்கு ஞாபகம். woods are lively
ReplyDeleteமட்டுமல்ல. எனது 11 ம். வகுப்பு ஆங்கில மனப்பாடலும் கூட. நினைவூட்டலுக்கு் நன்றி தோழா். பண்டிட் இறப்பு குறிப்பில் இடம் பெற்றிருந்த. பாரா். நன்றி. நரசிம்மன்
முழுப் பாடலும் மனப்பாடப்பகுதியாக உனக்கு வந்திருக்கக் கூடும். அப்பா உனக்கு இந்த வரிகளைச் சொன்னாரா? மகிழ்ச்சி நரசிம்மா
DeleteRobert Frost கவிதைகள் மற்றும் மொழி பெயர்ப்பு அருமையாக இருந்தது. யாராவது எடுத்துச் சொன்னால்தான் இது போன்ற விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் சந்தானத்திற்கு நன்றி
ReplyDeleteநன்றி ராமனாதன்
Deleteமொழிபெயர்ப்பு சிறப்பாக இருக்கிறது.
ReplyDeleteஅதிலும் பனித்துகள் கவிதை தமிழ் ஒரிஜினல்.
தேர்ந்தெடுத்த கவிதைகள் super.
மிக்க நன்றி மதி
ReplyDelete