தினம் தினம் நினைவுகள் எதை எதையோ மீட்டிப போகும். சிறு வயதில் ரேடியோப் பெட்டியில் ஒரு பாடலைக் கேட்டிருக்கிறேன். பாடல் வரிகள் எல்லாம் அத்தனை புரியாது. ஆனால் அந்த ராகம் தரும் குழைவு மனதில் வெகு காலம் நின்றது. வெண்ணெய் முழுதுமாக காய்ந்து நெய்யாகும் போது எழுகின்ற மணத்தைப் போல.
அந்தப் பாடலின் முதல் வரிகள்..
எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே நாடுதே
கண்ணிரண்டும் ஓர் முகத்தையே தேடுதே
இந்த இரண்டு வரிகளைத் தாண்டி பாடல் வரிகளை மனம் அறிந்ததில்லை. சில நாட்கள் முன்பு தான் இந்தப் பாடல் வரிகளை முழுதும் கவனித்துக் கேட்டேன்.
தேனேந்தும் மலராகி
வானேந்தும் நிலவாகி…..
சிந்தை கவர்ந்திடுதே
செங்கதிர் சுடர் போலே
என் கரம் நீண்டிருந்தால்…
இப்படி எல்லாம் நெடுகிலும் உவமைகள். ஆனால் எனக்கு ஆச்சரியம் இரண்டாவது சரணத்தில் காத்திருந்தது. கனவில் கண்ட காட்சியில் மையல் தீருமா? நுரை தின்று பசி தீருமா? மலரின் நிழல் மணம் வீசுமா? முத்து மாலையின் நிழல் விலை போகுமா?
இப்படி எல்லாம் கவிஞர் அடுக்கிக் கொண்டே போகிறார்.
பின்பு வரும் வரிகளைப் பாருங்கள்.
நெய்யும் தறியில் நூல் நெருங்குவது போலே
நேச முகம் இரண்டும் நெருங்குமா?
மனதில் இதை காட்சிப் படுத்திப் பாருங்கள். சின்னச் சின்னதாய் இழைகள் பின்னிப் பின்னி ஒன்றுடன் ஒன்று நெருங்குவதை. அற்புதம்.
பாடல் வரிகளை எழுதியவர். சுரதா என்ற சுப்புரத்தின தாசன். இவரை உவமைக் கவிஞர் என்று குறிப்பிடுவார்கள்.
பாடலைக் கேட்கலாம்.
முதல் முறையாகக் கேட்கிறேன். அருமை. பகிர்தலுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி கேட்டதற்கு
Deleteபாட்டு கேட்ட நினைவிருக்கிறது. ஆனால் இவ்வளவு அறிமுகத்தோடு கேட்டதில்லை. பதிவுக்கு நன்றி
ReplyDeleteநன்றி ராம்
Deleteநல்ல பாட்டு semi classic. எனக்கு TA மோதி பாடிய, சபாஷ் மீனா பாடல் நினைவுக்கு வந்தது.
ReplyDeleteகாணா இன்பம் கனிந்த தேனோ தானே? கன்னல் மொழியே மின்னல் எல்லாம் விண்ணோர் செய்யும் வேடிக்கையோ என்றெல்லாம் வரிகள் வரும் என்று ஞாபகம்
Deleteவிண்ணில் வாண வேடிக்கையோ
ReplyDelete