To be honest, I never intended to be a writer at all. Long periods of solitude were first a circumstance, then a preference and finally a necessity.
Frederick Forsyth in his book The Outsider
1978ம் வருடம் ஒரு தீபாவளி நன்னாளில் அந்தத் திரைப்படத்தைப் பார்த்தேன். அது The Day of the Jackal. பிரெஞ்சு அதிபர் டி கோல். அவரைக் கொல்ல முடிவு செய்கிறார்கள். கூலிக்கு ஒருவனை நியமிக்கிறார்கள். Hired assassin. இதற்காக அவன் மாறி மாறி வேடம் அணிந்து கொள்கிறான். போலி அடையாள அட்டை போலி பாஸ்போர்ட் எல்லாம் தயாரித்து பலர் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு பிரான்ஸ் வருகிறான். போரில் மடிந்த வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி.
கால் இழந்த முன்னாள் ராணுவ வீரன் போல வேடமிட்டு வருகிறான் கொலையாளி. ஒரு உயரமான கட்டிடத்தின் மேல் டெலஸ்கோப் பொருத்திய மெளனத் துப்பாக்கியோடு காத்திருக்கிறான். அதிபர் டி கோல் தன் கையால் ஒவ்வொருவருக்கும மெடல் குத்தி விடுகிறார். டி கோல் கிட்டத்தட்ட ஏழடி உயரம். உயரமான கட்டிடத்தின் மேலிருந்து கொலையாளி அதிபரின் நெற்றிப் பொட்டைக் குறி பார்த்தபடி இருப்பான். துப்பாக்கியின் விசையை அழுத்துவான். சரியாக அதே சமயம் உயரம் குறைந்த ஒருவருக்கு மெடலைக் குத்திவிட அதிபர் டி கோல் குனிந்து விடுவார். குண்டு அவர் தலைக்கு மேல் செல்ல உயிர் தப்பி விடுவார்.
The Day of the Jackal என்ற பெயரில் Frederick Forsyth எழுதிய நாவல்தான் திரைப்படம் ஆனது. கல்லூரி நாட்களில் படித்திருந்தேன். விறுவிறுப்பான கதை. ஜாகுவார் என்ற காரைப் பற்றி இதைப் படித்த போது தான் தெரிந்தது. அதிபர் டி கோலின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்ள ஒரு மந்திரி இருப்பார். அமைச்சரவைக் கூட்டங்களில் அவருக்குச் சரியாகப் பேச வராது. ஆனால் நல்ல திறமைசாலி. அவருடைய யோசனைகளை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். கேலி பேசுவார்கள். இதற்கெல்லாம் அவர் கவலைப்பட மாட்டார். தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்துவார். ஒவ்வொரு முறையும் கொலையாளியை நெருங்கும் போது அவன் ஒரு சின்ன இழையில் தப்பித்துக் கொண்டே இருப்பான். இறுதியில் இவருடைய சாதுரியமே வெல்லும். கதையைப் படிக்கும் போது மிகவும் சுவாரஸ்யமாக இந்தப் பகுதிகள் இருக்கும்.
ஒரு சமயம் தொடர்ந்து Frederick Forsyth கதைகளைப் படிக்க நேர்ந்தது. The Odessa File, The Dogs of War என்றெல்லாம். இவை இரண்டுமே திரைப்படமாகி வெற்றி பெற்றன. The Devil's alternative என்று கூட ஒரு கதை படித்த ஞாபகம் இருக்கிறது.
இவை எல்லாமே கல்லூரி நாட்களில் தான்.
வருடங்கள் சென்ற பின் No Comebacks என்று Frederick Forsyth எழுதிய ஒரு புத்தகம் படித்தேன். அது நாவல் அன்று. சிறுகதைகளின் தொகுப்பு. கதைகள் எல்லாமும் thriller வகைதான். இதை எனக்குப் படிக்கத் தந்த அலுவலக நண்பர் இப்போது இல்லை. புத்தகத்தை எழுதியவரும் சமீபத்தில் மறைந்து விட்டார்.
சாகசங்கள் நிறைந்த வாழ்க்கை எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை. இளமை சாகசங்களைத் தேடுகிறது. அது இது போன்ற நாவல்களைப் படிப்பதிலும் திரைப்படங்களைப் காண்பதிலும் நிறைவு கொள்கிறது. யாவற்றிலும் ஒரு ஆழமான உளவியல் இருக்கிறது.

True..we tend to identify ourselves with our favorite heroic actions whike reading such stories get inspired fir some time thereafter. Same way, we live in our memories, recalling various moments in our lives, true life stories. We read our stories; so what are we now? Our life is bundle of stories.
ReplyDeleteஎப்பவும் போல அழகாக எழுதியிருக்காய். நான் படிக்கவும் இல்லை படமும் பர்த்ததில்லை. நாவலை வாங்கி படிக்கத் தூண்டுகிறது உன் பதிவு. 78 தீபாவளி, நீங்க பி 13, நாங்க தேன்மொழி. ஒரு க்ரூப் இளமை ஊஞ்சலாடுகிறது போன நினைவு. நான்லாம் அரை டிக்கெட்.
ReplyDeleteநல்ல நினைவுகள்
DeleteOdessa file and The Day of the Jackal படம் பார்த்திருக்கிறேன் thriller படங்கள் பார்ப்பதில் ஓர் ஆர்வம் இருந்தது. பழைய நினைவுகள். பதிவுக்கு நன்றி
ReplyDeleteநன்றி ராமனாதன்
DeleteWhen we were in Madurai, I didn't watch the movie but read the novel. Probably my first action packed novel in English. English movies I remember watching i. Madurai at that time were Force 10 from Navrone, Mackenna's Gold, The Spy Who Loved Me, Gods Must be Crazy - mainly Cinipriya/Minipriya and Regal Theatre.
ReplyDeleteWhere Eagles Dare, Crazy boys of the game etc
ReplyDelete