குறுந்தொகையில் ஒரு பாடல். வெள்ளிவீதியார் இயற்றியது. செவிலித் தாய் பாடுவதாக அமைந்திருக்கிறது.
காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.
பொருளைப் பார்க்கலாம்.
தலைவி தலைவனுடன் சென்று விட்டாள்.
அவளைத் தேடி ஓடி ஓடி கால்கள் சலித்துப் போயின.
அவள் சென்ற திசையைப் பார்த்துப் பார்த்து கண்களில் ஒளி குன்றியது. இந்த உலகத்தில் எத்தனையோ பேர் உள்ளனர்.
அகன்ற வானில் உள்ள நட்சத்திரங்களை விட அளவில் அதிகமானவர்கள். எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை?
செவிலித் தாய் இப்படித் தனியே நின்று புலம்புகிறாள்
நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் ஒன்று.
நோக்கி நோக்கி உன்னைக் காண்பன்
நாக்கு நீள்வன் ஞானம் இல்லை நாள்தோறும் என்னுடைய
ஆக்கை உள்ளும் ஆவி உள்ளும் அல்ல புறத்தின் உள்ளும்
நீக்கம் அன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே
நோக்கி நோக்கி உன்னைக் காண்பன் என்ற சொல்லில் எத்தனை வேட்கை. மீண்டும் மீண்டும் காண வேண்டுமென்ற மீளாத வேட்கை. உயிரின் உள்ளேயும் உடம்பின் உள்ளேயும் வெளியில் எங்கும் நீக்கம் இன்றி நிற்கும் பெருமான் மேல் தீராத வேட்கை.
எத்தனை பரவசம்!
ஒரு பழைய திரைப்படப் பாடலைக் கேட்டேன். எத்தனை இதம்!
அந்தப் பாடல் பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன் என்று தொடங்குகிறது.
காதல் வயப்பட்ட மனதில் தான் எத்தனை பரவசம்!
பார்வை இழந்து,.. வார்த்தை இழந்து ..நெஞ்சம் இழந்து … தன்னை மறந்து.. ஆவி இழந்து… பெருமை இழந்து ….என்ன என்னவெல்லாம் நடந்து விடுகிறது
பாடலைக் கேளுங்கள்.
👍 Expectation என்கிற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் 'எதிர்பார்த்தல்' - எதிர் பார்த்தலின் களைப்பு கண்களைதான் பாதிக்கிறது. வாலியின் சில பாடல் வரிகளில் கூட இதைப் பார்க்கலாம்:
ReplyDelete'பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த காட்சி இன்று காணக் கிடைக்க, 'பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட'.
அருமை சீனு
ReplyDeleteI love how you connect your thoughts and present them so coherently. Makes the piece engaging.
ReplyDeleteThank you Janani
Deleteபாட்டு நன்றாக இருந்தது. குறுந்தொகை திருவாய்மொழி சினிமாப்பாடல் தொடர்பு படுத்தியது அருமை. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராமனாதன்
Delete