Moonlit Night
Tonight my wife must watch alone
the full moon over Fu-zhou;
I think sadly of my sons and daughters far away,
too young to understand this separation
or remember our life in Chang'an.
In fragrant mist, her flowing hair is damp;
In clear moonlight, her jade-white arms are cold.
When will we lean at the open casement together
while the moonlight dries our shining tears?
Du Fu
நிலவொளி இரவு
இன்று இரவு எனது மனைவி
தனியே முழு நிலவைக் காண்பாள்
தூர தூரத்தில் இருக்கும் எனது மக்களை
நினைத்துக் கொள்கிறேன்
வயதில் சிறிய அவர்களுக்கு
இந்தப் பிரிவின் துயரம் புரியாது
சாங்கனில் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை கூட நினைவில் இருக்காது
பனியின் வாசமும் விழுகின்ற அவள் கூந்தலின் ஈரமும்..
தெளிந்த நிலவில் தண்ணென்றிருக்கும்
வெண்ணிறக் கைகளும்..
நாங்கள் எப்போது இனி ஒன்றாக
திறந்த சன்னலின் மீது சாய்ந்து இருப்போம்
நிலவொளி எங்கள் ஒளிரும் கண்ணீர்த் துளிகளை உலரச் செய்யும் போது
சீனக் கவிஞர் டூ ஃபூவின் கவிதை சங்க காலக் கவிதை போல இருக்கிறது.
பள்ளிப் பருவத்தில் படித்த சத்திமுத்தப் புலவரின் பாடல் ஞாபகம் வந்தது.
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாரையைத் தூது விடும் பாடல். அங்கே சத்திமுத்தத்தில் மனைவி காத்திருக்கிறாள். மழையில் சுவர் நனைந்திருக்கிறது. பல்லியின் ஓசையைக் கூர்ந்து கவனித்தபடி இருக்கிறாள். ஏதாவது நல்ல சகுனம் வருகிறதா என்று.
அவளிடம் சென்று வறுமையிலும் குளிரிலும் தான் வாடுவதைக் கூறுக என்று நாரையைத் தூது விடுகிறார். அதுவும் தென்திசைக் குமரியாடி வட திசைக்கு செல்ல நேர்ந்தால் தனது நிலையைச் சொல்லச் சொல்கிறார். தங்களது ஊரில் உள்ள நீரோடையில் அந்த நாரை தனது துணையோடு தங்கிக் கொள்ளலாம் என்று தாராளமாக அனுமதியும் வழங்குகிறார்.
இலக்கியம் எப்போதும் பிரிவைப் பேசுகிறது. அது எந்த மொழியாக இருந்தாலும்.
Can't write any comment but can remain choked in thoughts as a Can(bank)man, he being the Conman.
ReplyDeleteநட்சத்திரங்களை இரவு வானில் பார்த்தே பல வருடங்களாகிவிட்டது. மொட்டை மாடியும் இல்லை, மாடி இருந்தாலும் நகர வெளிச்சத்தில் நட்சத்திரங்கள் தெரிவதில்லை. நிலவும் நட்சத்திரங்களும் கவிதைகளில்தான் தெரிகிறது இப்போது :)
ReplyDelete-சீனு
உண்மை
Delete