வினோத் குமார் சுக்லா செவ்வாய்க் கிழமை 23.12.2025 அன்று மறைந்தார். 88 வயது. ஹிந்திக் கவிஞர். கதைகளும் எழுதி இருக்கிறார்.
नौकर की कमीञ நெளகர் கீ கமீஸ் (வேலைக்காரனின் சட்டை) அவர் எழுதிய நாவல். இதை மணி கெளல் திரைப்படம் ஆக்கினார்.
இந்த இரண்டு நாட்களில் இவருடைய நிறைய கவிதைகளைப் படித்தேன். எளிமையான சொற்கள் . கனிந்த கருத்துக்கள். பிரமித்துப் போனேன். Simple is the seal of virtue.
குழந்தைகள் சில சமயம் நம்மிடம் கேள்வி கேட்கும். பதில் சொல்ல முடியாது. யோசித்தபடியே நின்று விடுவோம். இவருடைய கவிதைகளைப் படிக்கும் போது அப்படி ஒரு அனுபவம் நேர்கிறது.
சின்னதாக கணக்கு போடுவது போல ஒரு கவிதை.
रात दस मिनट की होती
तो पाँच मिनट में आधी रात हो जाती
रातें ऐसी ही बीतीं।
दिन दस मिनट का होता
तो पाँच मिनट में आधा दिन बीत जाता
दिन ऐसे ही बीते।
मैं दो दिन की ज़िंदगी जी सकता हूँ
एक दिन मैं तुम्हारे पास रहूँगा
दूसरे दिन तुम मेरे पास रहना।
இரவு என்பது பத்து நிமிடம்
என்றால்
ஐந்தே நிமிடத்தில் நடுநிசி ஆகிவிடும்
இரவுகள் இப்படியே கழிந்து விடும்
பகல் என்பது பத்து நிமிடம்
என்றால்
ஐந்தே நிமிடத்தில் நண்பகல் வந்து விடும்
நாட்கள் இப்படியே சென்று விடும்
வாழ்க்கை என்பது இரண்டே நாள்
என்றால்
ஒரு நாள் நான் உன்னிடம் இருப்பேன்
மறுநாள் நீ என்னிடம் இரேன்
சின்ன வயதில் விளையாடும் போது உனக்கு ஒரு பங்கு எனக்கு ஒரு பங்கு உனக்கு ஒரு வாய் எனக்கு ஒரு வாய் என்று எல்லாம் பேசிக் கொள்வோம். அந்த மொழியில் இந்தக் கவிதையும்
अपने हिस्से में लोग आकाश देखते हैं
और पूरा आकाश देख लेते हैं
सबके हिस्से का आकाश
पूरा आकाश है।
अपने हिस्से का चंद्रमा देखते हैं
और पूरा चंद्रमा देख लेते हैं
सबके हिस्से का चंद्रमा वही पूरा चंद्रमा है।
अपने हिस्से की जैसी-तैसी साँस सब पाते हैं
वह जो घर के बग़ीचे में बैठा हुआ
अख़बार पढ़ रहा है
और वह भी जो बदबू और गंदगी के घेरे में ज़िंदा है।
सबके हिस्से की हवा वही हवा नहीं है।
अपने हिस्से की भूख के साथ
सब नहीं पाते अपने हिस्से का पूरा भात
बाज़ार में जो दिख रही है
तंदूर में बनती हुई रोटी
सबके हिस्से की बनती हुई रोटी नहीं है।
जो सबकी घड़ी में बज रहा है
वह सबके हिस्से का समय नहीं है।
इस समय।
சனங்கள் தங்கள் பங்கான ஆகாயத்தைப் பார்க்கிறார்கள்
ஆனால் முழு ஆகாயத்தையும் பார்த்து விடுகிறார்கள்
எல்லா சனங்களின் பங்கு தான் முழு ஆகாயம்
தங்கள் பங்கான நிலவைப் பார்க்கிறார்கள்
ஆனால் நிலவு பூராவும் பார்த்து விடுகிறார்கள்
எல்லாருடைய பங்கு தான் அந்த நிலவு பூராவும்
தங்களுடைய பங்கான சுவாசத்தை எல்லோரும் பெறுகிறார்கள்
அங்கு ஒருவன் வீட்டு வாசலில் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறான்
அவனும் நாற்றமும் மாசும் கலந்த காற்றை சுவாசித்து உயிர் வாழ்கிறான்
எல்லாருடைய பங்குமான காற்று அந்தக் காற்று அல்ல
தங்களுடைய பங்குக்கான பசியைப் போல
தங்களுடைய பங்கான சோறு எல்லோருக்கும் கிடைப்பது இல்லை
கடையில் தணலில் சுடப்படும் ரொட்டியை பார்க்க முடிகிறது
எல்லாருடைய பங்குக்குமான ரெட்டி அல்ல அது
கடிகாரத்தில் மணியடிக்கிறது
எல்லாருடைய பங்குக்கும் ஆன நேரம் அல்ல அந்த நேரம்
நம்முடைய பங்கு எது என்பதில் நமக்குக் கவனம் இருப்பதில்லை. பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம் என்பது மனதில் ஏறுவதே இல்லை.
வித்தியாசமாக ஆனால் எளிதாக இருக்கிறது. பசுவய்யாவின் 'காலம்' கவிதையில் ' மணியின் முள்ளில் காலமில்லை' என்ற வரியை நினைவூட்டுகிறது. நன்றி தகவலுக்கும், மொழி பெயர்ப்புக்கும்.
ReplyDelete- சீனு
ஆமாம். வியக்க வைக்கும் எளிமை. அபாயகரமான எளிமை. இரண்டு நாட்களில் இவருடைய கவிதைகள் நிறைய மொழிபெயர்த்து விட்டேன். பகிருகிறேன்
Delete