Skip to main content

இரவு என்பது பத்து நிமிடம்

 வினோத் குமார் சுக்லா செவ்வாய்க் கிழமை 23.12.2025 அன்று மறைந்தார். 88 வயது. ஹிந்திக் கவிஞர். கதைகளும் எழுதி இருக்கிறார்.




नौकर की कमीञ நெளகர் கீ கமீஸ் (வேலைக்காரனின் சட்டை) அவர் எழுதிய நாவல். இதை மணி கெளல் திரைப்படம் ஆக்கினார்.

இந்த இரண்டு நாட்களில் இவருடைய நிறைய கவிதைகளைப் படித்தேன்.  எளிமையான சொற்கள் . கனிந்த கருத்துக்கள். பிரமித்துப் போனேன். Simple is the seal of virtue. 

 குழந்தைகள் சில சமயம் நம்மிடம் கேள்வி கேட்கும். பதில் சொல்ல முடியாது. யோசித்தபடியே நின்று விடுவோம்.  இவருடைய கவிதைகளைப் படிக்கும் போது அப்படி ஒரு அனுபவம் நேர்கிறது.

சின்னதாக கணக்கு போடுவது போல ஒரு கவிதை.


रात दस मिनट की होती

तो पाँच मिनट में आधी रात हो जाती

रातें ऐसी ही बीतीं।


दिन दस मिनट का होता

तो पाँच मिनट में आधा दिन बीत जाता

दिन ऐसे ही बीते।


मैं दो दिन की ज़िंदगी जी सकता हूँ

एक दिन मैं तुम्हारे पास रहूँगा

दूसरे दिन तुम मेरे पास रहना।


இரவு என்பது பத்து நிமிடம்

என்றால்

ஐந்தே நிமிடத்தில் நடுநிசி ஆகிவிடும்

இரவுகள் இப்படியே கழிந்து விடும்


பகல் என்பது பத்து நிமிடம்

என்றால்

ஐந்தே நிமிடத்தில் நண்பகல் வந்து விடும்

நாட்கள் இப்படியே சென்று விடும்


வாழ்க்கை என்பது இரண்டே நாள்

என்றால்

ஒரு நாள் நான் உன்னிடம் இருப்பேன்

மறுநாள் நீ என்னிடம் இரேன் 


சின்ன வயதில் விளையாடும் போது உனக்கு ஒரு பங்கு எனக்கு ஒரு பங்கு உனக்கு ஒரு வாய் எனக்கு ஒரு வாய் என்று எல்லாம் பேசிக் கொள்வோம். அந்த மொழியில் இந்தக் கவிதையும் 


अपने हिस्से में लोग आकाश देखते हैं

और पूरा आकाश देख लेते हैं


सबके हिस्से का आकाश

पूरा आकाश है।


अपने हिस्से का चंद्रमा देखते हैं

और पूरा चंद्रमा देख लेते हैं


सबके हिस्से का चंद्रमा वही पूरा चंद्रमा है।

अपने हिस्से की जैसी-तैसी साँस सब पाते हैं


वह जो घर के बग़ीचे में बैठा हुआ

अख़बार पढ़ रहा है


और वह भी जो बदबू और गंदगी के घेरे में ज़िंदा है।

सबके हिस्से की हवा वही हवा नहीं है।


अपने हिस्से की भूख के साथ

सब नहीं पाते अपने हिस्से का पूरा भात


बाज़ार में जो दिख रही है

तंदूर में बनती हुई रोटी


सबके हिस्से की बनती हुई रोटी नहीं है।

जो सबकी घड़ी में बज रहा है


वह सबके हिस्से का समय नहीं है।

इस समय।


சனங்கள் தங்கள் பங்கான ஆகாயத்தைப் பார்க்கிறார்கள்

ஆனால் முழு ஆகாயத்தையும் பார்த்து விடுகிறார்கள்

எல்லா சனங்களின் பங்கு தான் முழு ஆகாயம்


தங்கள் பங்கான நிலவைப் பார்க்கிறார்கள்

ஆனால் நிலவு பூராவும் பார்த்து விடுகிறார்கள்

எல்லாருடைய பங்கு தான் அந்த நிலவு பூராவும்


தங்களுடைய பங்கான சுவாசத்தை எல்லோரும் பெறுகிறார்கள்


அங்கு ஒருவன் வீட்டு வாசலில் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறான்

அவனும் நாற்றமும் மாசும் கலந்த காற்றை சுவாசித்து உயிர் வாழ்கிறான்

எல்லாருடைய பங்குமான காற்று அந்தக் காற்று அல்ல


தங்களுடைய பங்குக்கான பசியைப் போல

தங்களுடைய பங்கான சோறு எல்லோருக்கும் கிடைப்பது இல்லை


கடையில் தணலில் சுடப்படும் ரொட்டியை பார்க்க முடிகிறது 

எல்லாருடைய பங்குக்குமான ரெட்டி அல்ல அது


கடிகாரத்தில் மணியடிக்கிறது

எல்லாருடைய பங்குக்கும் ஆன நேரம் அல்ல அந்த நேரம்


நம்முடைய பங்கு எது என்பதில் நமக்குக் கவனம் இருப்பதில்லை.  பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம் என்பது மனதில் ஏறுவதே இல்லை.









Comments

  1. வித்தியாசமாக ஆனால் எளிதாக இருக்கிறது. பசுவய்யாவின் 'காலம்' கவிதையில் ' மணியின் முள்ளில் காலமில்லை' என்ற வரியை நினைவூட்டுகிறது. நன்றி தகவலுக்கும், மொழி பெயர்ப்புக்கும்.
    - சீனு

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். வியக்க வைக்கும் எளிமை. அபாயகரமான எளிமை. இரண்டு நாட்களில் இவருடைய கவிதைகள் நிறைய மொழிபெயர்த்து விட்டேன். பகிருகிறேன்

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...