Skip to main content

Posts

இருளை மூடிய இருள்

  My friend is a stranger, someone I do not know. A stranger far far away. For his sake my heart is full of disquiet because he is not with me. Because, perhaps, after all he does not exist. Who are you who so fill my heart with your absence? Who fill the entire world with your absence? You who existed before the mountains and the clouds, before the sea and the winds. You whose beginning is before the beginning of all things, and whose joy and sorrow are older than the stars. You who from eternity have wandered among the stars of the Milky Way and through the great darknesses between them. You who were alone before loneliness, and whose heart was full of disquiet before any human heartdo not forget me. But how could you possibly remember me? How could the sea possibly remember the sea-shell that once it surged through. PAR LAGERKVIST Translated by W. H. Auden with Leif Sjberg பெர் லாகர்க்விஸ்ட் எழுதிய பாரபாஸ் என்ற நாவலைப் பற்றி முன்னம் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அவருடைய மற்ற...

கடலளவு கிடைத்தாலும்

  ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே? அடக்குவித்தால்                           ஆர் ஒருவர் அடங்காதாரே? ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே? உருகுவித்தால்                             ஆர் ஒருவர் உருகாதாரே? பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே? பணிவித்தால் ஆர்                                  ஒருவர் பணியாதாரே? காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே? காண்பார் ஆர்,                          கண்ணுதலாய்! காட்டாக்காலே?. இது அப்பர் பெருமானின் தனித்திருத்...

ஆசையின் பக்கங்கள்

  திருக்குறளைப் படிக்கப் படிக்க வியப்பு பெருகுகிறது. குறுகிய வரிகளில் எத்தனை நுட்பமான கருத்துக்கள்.  திருக்குறள் பலரையும் கவர்ந்து இருக்கிறது. டால்ஸ்டாய் காந்திக்கு எழுதிய கடிதத்தில் திருக்குறள் பற்றிப் பேசுகிறார். திருக்குறளை ஆங்கிலத்தில் கால்டுவெல் போப் மொழி பெயர்த்திருக்கிறார். ராஜாஜி மொழிபெயர்த்திருக்கிறார். மூன்றாவது பாலைத் தவிர்த்து விட்டார். சுத்தானந்த பாரதி செய்திருக்கிறார். அது ஒரு நல்ல மொழிபெயர்ப்பு. சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜாஜியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். சமீபத்தில் மீனா கந்தசாமி காமத்துப் பாலை The Book of Desire என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். 1984ல் பிறந்த மீனா கந்தசாமி கவி. எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். சமூகச் செயல்பாட்டாளர்.  இந்த The Book of Desire பற்றி ஒரு கட்டுரையைப் படித்தேன். 1113 வது குறளை மீனா கந்தசாமி இப்படி மொழி பெயர்த்திருக்கிறார். முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு My bamboo-shouldered beauty has a slender frame, a pearly smile, a fragrance that drives me wild, a...

நீ தனியே நடக்கும் பாதை

The Path On Which You Are Walking Alone  by Pär Lagerkvist The lonely man is the weakest one. Not because he is alone but because He is denying what he is carrying within himself. Our soul, getting deeper, is the broad river of life. The path on which you are walking alone, is leading away from yourself. பெர் லாகர்க்விஸ்ட் ஸ்வீடன் தேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர். கவிஞர். நோபல் பரிசு வென்றவர். பாரபாஸ் என்ற இவரது நாவலுக்காக க.நா.சுப்ரமணியன் இந்தக் கதையை அன்பு வழி என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். அன்பு வழி போல ஒரு நாவல் எழுதி விட மாட்டோமா என்ற ஆசையில் தான் எழுதிப் போகிறேன் என்று வண்ணநிலவன் கடல்புரத்தில் என்ற நாவலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.  பாரபாஸ் என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை சமீபத்தில் படித்து முடித்தேன். பாரபாஸ் கொள்ளையன். சிலுவையில் ஏற்றப்பட வேண்டியவன்.  பஸ்கா விருந்து நாளில் குற்றவாளி ஒருவனை விடுதலை செய்ய முடியும். பிலாத்து மக்களிடம் கேட்கிறான்.  நசரேயன் என்ற ஏசு அல்லது கொள்ளையன் பாரபாஸ் இவர்களில் யாரை விடுதலை செய்ய வேண்டும் எ...

எனைத் தேடும் மேகம்

  மேகம் அலைந்து கொண்டிருக்கும். அது என்ன தேடும்? மனம் அலைந்தபடியே இருக்கும். அது எதைத்தான் நாடும்?  கவி மனம் மேகத்தோடு பேசுகிறது.  மேகத்தைத் தூது விடுகிறது.  மேகத்தோடு விளையாடுகிறது. மேகம் தன்னைத் தேடுவதாகக் கற்பனை செய்கிறது.  சின்னச் சின்ன மேகம் தொட்டுப் பேசுவது போல உணருகிறது.  மேகம் விட்டு விலகிச் செல்லும் போது சோகம் கொள்கிறது. எண்பதுகளில் வந்த ஒரு பாடல் இப்படி எல்லாம் நினைவுகளைக் கிளறி வேடிக்கை பார்க்கிறது. இசை சங்கர் கணேஷ் இரட்டையர். கேட்கலாம்

இறங்கிய விடம்

  அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ, அன்பு உடைய மாமனும்   மாமியும் நீ, ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ, ஒரு குலமும  சுற்றமும் ஓர் ஊரும் நீ, துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, துணை ஆய் என்  நெஞ்சம் துறப்பிப்பாய் நீ, இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ, இறைவன் நீ-ஏறு ஊர்ந்த செல்வன் நீயே மேலே காண்பது திருநாவுக்கரசர் பதிகம். திருநாவுக்கரசர் திங்களூருக்கு வருகிறார். தோளில் உழவாரப் படை.  ஆலயத் திருப்பணியே கொண்ட லட்சியம். வயதில் தளர்ந்த உடல். ஆனால் தளராத மன உறுதி. இந்த ஊரில் ஒரு அதிசயம். எங்கு சென்றாலும் நாவுக்கரசர் பெயரில் நற்பணி நடக்கிறது. தண்ணீர்ப் பந்தல் நாவுக்கரசர் பெயரில். வாசகசாலை. நாவுக்கரசர் பெயரில்.  இப்படி எல்லாம். திருநாவுக்கரசருக்கு வியப்பு அடங்கவில்லை. எதிரில் தென்படும் ஒருவரிடம் விசாரிக்கிறார். இந்த தர்ம காரியங்களைப் புரிவது யார் என்று. அவர் அப்பூதி அடிகள் என்ற ஒருவர் திருநாவுக்கரசர் மேல் கொண்ட மாறாத அன்பினால் அவர் பெயரில் இந்த நற்பணிகளை செய்வதாகக் கூறுகிறார்.  இத்தனைக்கும் அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரை நேரில் கண்டதில்லை. திருந...

என் உள்ளில் எங்கோ

  பிள்ளைப் பருவத்திலே என்னைப் பேண வந்த ஒரு குரல். இப்படித்தான் வாணியின் குரலைச் சொல்ல வேண்டும். குரல் இனிமையானது. அழுத்தம் கூடியது. தெளிவான உச்சரிப்பு. அது எந்த மொழியாக இருந்தாலும். நல்ல ஞானம். பயிற்சி. ஹிந்துஸ்தானி இசையும் அதில் அடக்கம். எல்லா விதமான பாடல்களையும் சரளமாக மிகைத் தன்மை இன்றிப் பாடிச் சென்றிருக்கிறார்.  பாடல் வரிகளின் பொருள் உணர்ந்து பாடிச் சென்றிருக்கிறார். அது தனியாகப் பாடினாலும் இணைந்து பாடினாலும். வாணி தனியாகப் பாடிய பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும். ஆகாயம் மழை பொழிஞ்சா மண்ணுலகில் இன்று தேவன் நாதம் என்னும் கோவிலிலே நீராட நேரம் நல்ல நேரம் என் உள்ளில் எங்கோ என் கல்யாண வைபோகம் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். பெண்மை தன் நிலையைப் பெரிதும் பேசுவதில்லை. அது உள்ளத்தில் எங்கோ கிடக்கிறது. ஆற்றாமையாக,  தேடலாக,கொண்ட தனிமையாக தவிப்பாக,   இப்படி எல்லாமும் உள்ளே இறுகிக் கிடக்கிறது. தண்ணென்ற நீரில் கிடக்கும் கல்லைப் போல.  மற்றவர்கள் மீது காட்டும் பரிவும் சின்னச் சின்ன அக்கறைகளும் மெல்லச் சுரந்தபடியே இருக்கிறது. வாணியின் குரல் பெண்மையின் உணர்வுகளை மெல்ல மெல்ல ...

சிரிக்கும் சலங்கை

  சிரி சிரி முவ்வா என்று ஒரு திரைப்படம். நானும் பாஸ்கரும் மதுரையில் இந்தப் படத்தைப் பார்த்தோம். பாஸ்கர் எனது ஒன்று விட்ட தம்பி. இந்தத் திரைப்படம் பார்த்ததை நினைவு கூர்ந்து எழுதியிருந்தான். ஜெயப்ரதா அறிமுகம் ஆனது இந்தத் திரைப்படம் என்று நினைக்கிறேன். இந்தப் படம் நெடுக ஓயாமல் ஆடிக் கொண்டே இருப்பார். மாற்றாந்தாய் காலில் சூடு வைத்தாலும் ஆடிக் கொண்டே இருப்பார். இரவில்.நிலவொளியில். தென்னை மர நிழலில்.  பகல் வெயிலில் பாறையில். மலைச் சரிவில். நீரலையில் இப்படி எல்லாப் பொழுதும் எல்லா இடங்களிலும் ஆடியபடியே இருப்பார். ஆடுவதில் அத்தனை விருப்பம்.  அவருடைய தோழன் சந்திரமோகன். அவரும் குனிந்து வளைந்து நிமிர்ந்து சலிக்காமல் இணைந்து ஆடுவார்.  கிராமத்தில் இருந்து விலகி நகரத்துக்குச் சென்று கலையின் உச்ச நிலையை அடைந்து எப்படிப் புகழ் ஈட்டுகிறாரகள் எ ன்பது கதை. மிகையும் நாடகத் தன்மையும் யதார்த்தமும் ஒரு வினோதக் கலவையில் உருவான படம். இந்தப் படத்தை இயக்கியவர் கே.விஸ்வநாத். எனக்கு அப்போதெல்லாம் G R விஸ்வநாத் என்பவரைத் தான் தெரியும். சொல்ல வேண்டியதில்லை. அவர் அந்நாளில் ஒரு பிரபல கிரிக்கெட் வீரர்...

குழந்தையைப் போல

  எட்டு வயதில் டால்ஸ்டாய் அறிமுகம் ஆனார். அந்த வயதில் நூலகம் தெரியாது. சென்று புத்தகங்களைப் புரட்டி அறிந்து கொள்ள. பெரியவர்கள் யாராவது சொல்லி இருக்கலாம். அப்படியும் இல்லை. வீட்டிற்கு எதிரே நான் படித்த ஆரம்பப் பள்ளி.  ஆசிரியைகள் யாரும் டால்ஸ்டாயைப் பற்றிச் சொல்லவில்லை. ராஜேந்திரன் கதை சொல்வான். அது மகாபாரதத்திலிருந்து இருக்கும். பாண்டவர் வனவாசத்தின் போது நிகழ்ந்தவையாக இருக்கும்.  எல்லாம் சுவாரசியமான கதைகள்.  எனில் முதல் முதலாக டால்ஸ்டாயை அறிந்தது ஒரு திரைப்படத்தின் முலமாக. எங்கள் வீட்டின் பின்புறம் ஒரு தியேட்டர் இருந்தது. சந்திரா டாக்கீஸ் என்று சொல்லுவோம். அங்கே குழந்தையும் தெய்வமும் என்று ஒரு திரைப்படம் வெளியானது. அதில் குட்டி பத்மினி என்று ஒரு சிறுமி இரட்டை வேடத்தில் நடித்தாள். தாயும் தந்தையும் மன வருத்தத்தில் பிரிகிறார்கள்.  இத்தனைக்கும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்துப் பின்பு மணம் புரிந்தவர்கள். தன்மானம் உள்ள அவனால் பணக்கார வீட்டு மாப்பிள்ளையாகப் பொருந்தி வாழ முடியவில்லை பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்றைத் தந்தை எடுத்துச் சென்று விடுகிறான். அவள் பெயர் ...

தோற்கவில்லை

  ஹெமிங்வே The Sun also rises" என்று ஒரு நாவல் எழுதினார். அதுதான் அவருடைய முதல் நாவல். கிட்டத்தட்ட ஒரு வருடம் அவர் பாரீஸில் இருந்தார். அந்த சமயம் எழுதப்பட்ட நாவல் அது. ஸ்பானிய காளைச் சண்டையை மையமாக வைத்து எழுதினார் என்று சொல்வார்கள். நான் அந்த நாவலைப் படித்ததில்லை.  ஆனால்  The Undefeated என்ற அவரது கதையைப் படித்தது உண்டு.  அது ஒரு காளைச் சண்டை வீரனைப் பற்றியது. அவன் பெயர் மானுவல் கார்ஸியா. ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக வலம் வந்தவன். ஆனால் இப்பொழுது..?  வாய்ப்புக் கேட்டு ரெடினாவை அணுகுகிறான்.  உயிரோடுதான் இருக்கிறாயா?  அடிபட்டுக் கொண்டாயாமே? வேறு வேலை தேடிக் கொள்ள வேண்டியது தானே? என்கிறான்  ரெடினா அலட்சியமாக. மானுவல் தளராமல் பதில் கூறுகிறான். எனக்குத் தெரிந்த வேலை காளையோடு சண்டை இடுவது மட்டுமே என்கிறான்.  அப்படி என்றால் உன்னை மாற்று வீரனாகத்தான் களமிறக்க முடியும் என்கிறான் ரெடினா. நான் ஒருபொழுதும் மாற்று வீரனாகக் களம் இறங்கியதில்லை என்கிறான் மானுவல். உனது இஷ்டம் என்கிறான் ரெடினா. தனது நிலைமையை எண்ணி வேறு வழியின்றி ஒப்புக் கொள்கிறான் முன்னாள் ...