Skip to main content

Posts

நான் யாரும் இல்லை

  அது 1993 ம் வருடம். மதுரையில் நாடக விழா நடந்தது. கோமல் சுவாமிநாதன் பொறுப்பேற்று நடத்தினார். பல நவீன நாடகக் குழுக்கள் பங்கேற்றன.  ஞாநியின் பரீஷா குழுவும் அதில் அடக்கம்.அன்று துவக்க விழா. நான் அரங்கிற்கு வெளியே இருந்தேன். விழாவைத் துவக்க இருந்தவர் எழுத்தாளர் சுஜாதா. ஒரு கார் அவரை இறக்கி விட்டுச் சென்றது. இறங்கிய அவர் என் மீது ஏறக்குறைய மோதுவது போல ஆயிற்று. சென்ற வாரக் குமுதத்தில் 21ம் விளிம்பு என்று அவர் எழுதிய கட்டுரைத் தொடரில் என்னுடைய கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதையை சிலாகித்து எழுதியிருந்தார். எனது நண்பன் ஆர்க்கே நான் கையெழுத்து இட்டுத் தந்திருந்த கவிதைத் தொகுப்பின் ஒரு பிரதியை அவரிடம் தந்திருக்கிறான். நான் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்த போது இதை சுஜாதா குறிப்பிட்டார். "In future everybody will be famous for at least a few minutes" என்று அவர் எப்போதோ எழுதியிருந்ததைக் குறிப்பிட்டேன். சுஜாதா கண்களை அகல விரித்துப் பார்த்தார்.  ஓரு கல்லூரி மாணவனுக்கு உரிய பரபரப்பும் வேகமும் அவரது பேச்சில் இருந்தது.  "கலாப்ரியா வந்திருக்கிறாரா" என்று ஆசையுடன் கேட்ட...

அன்றே அப்போதே வீடு

  வீடென்று எதனைச் சொல்வீர்? அது இல்லை என் வீடு ஜன்னல் போல் வாசல் உண்டு எட்டடிச் சதுரம் உள்ளே பொங்கிட மூலை  ஒன்று புணர்வது மற்றொன்றில் நண்பர்கள் வந்தால் நடுவிலே குந்திக் கொள்வர் தலை மேலே  கொடிகள் ஆடும் கால்புறம் பாண்டம் முட்டும் கவி எழுதி விட்டு செல்ல கால் சட்டை மடித்து வைக்க வாய் பிளந்து வயிற்றை எக்கிச் சுவரோரம் சாய்ந்த பீரோ அது மாலன் எழுதிய கவிதை. எண்பதுகளில் வாசித்திருக்கிறேன். அது மாலன் சாவி பத்திரிக்கையில் எழுதிய சிறுகதையின் துவக்க வரி. சிறுகதையின் தலைப்பு " கல்லுக்குக் கீழும் பூக்கள்".  எந்திரமாகிப் போன மனித வாழ்க்கை. அதில் கொஞ்சம் போல கவிதை.   சுமைகள் வந்து அழுத்தும் நடுத்தர வர்க்க வாழ்க்கை. அதில் துளியூண்டு ரசனை. கதையைச் சொல்லும் "இவன்" காலைப் பனியில் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகிறான். தண்டவாள இரும்புக்கும் குவிந்திருக்கும் சரளைக் கற்களுக்கும் இடையே நீல மலர்கள் மலர்ந்து கிடப்பதைப் பார்க்கிறான். இது தான் கதை.  "மனே" என்று ஒரு கன்னடத் திரைப்படம். மனே என்றால் வீடு. கிரீஷ் காசரவல்லி இயக்கம். நசிருதீன் ஷா மற்றும் தீப்தி நாவல் நடித்திருந்தனர்.  தேசிய விர...

என் ரோஜாப் பதியன்கள்

  தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் பெண்கள் தான் தற்கொலை செய்து கொள்வார்கள் கயிற்றில தொங்குவார்கள். அல்லது விஷம் என்று ஒரு குப்பியில்  எழுதியிருக்கும். அதிலிருந்து எதையோ எடுத்துச் சாப்பிட்டு விட்டு உயிரை விடுவார்கள். காலம்  செல்லச் செல்ல  தூக்க மாத்திரைகளை அதிகமான எண்ணிக்கையில் விழுங்கி விட்டு உயிர் துறப்பார்கள். ஆற்றில் விழும் கதாநாயகிகளும் உண்டு. டால்ஸ்டாய் எழுதிய முக்கியமான கதை அன்னா கரனினா. அன்னா என்ற அந்த பரிதாபத்திற்குரிய பெண் ரயிலின் குறுக்கே பாய்ந்து விடுவாள்.  தற்கொலை என்பது கண நேரத்தில் எடுக்கப் படும் முடிவு. அந்தக் கணத்தைக் கடந்து விட்டால் எண்ணம் மாறிவிடும். ஆழமான உளவியல் காரணங்களும் அதீதமான மன அழுத்தமும் தற்கொலைக்குக் காரணமாகிறது. பெரும்பாலும் அது ஒரு கவன ஈர்ப்பு. ஆத்மாநாம் அற்புதமான கவிஞர்.  கவிதைக்காகவே "ழ" என்று ஒர் பத்திரிக்கை நடத்தி வந்தார்.  இந்த உலகத்தில் அவர் எதிர்பார்த்தது கொஞ்சம் அன்பும்  சிறிது கவனமும் தான். நிராகரிக்கப் படுவது பெரிய கொடுமை. கவிதை ததும்பும் உள்ளம் அதிக மனவெழுச்சிக்கு உள்ளாவது இயல்பு. துள்ளுவதும் அடங்குவதும்...

சைக்கிள் திருடர்கள்

  சைக்கிள் என்று ஒரு வாகனம் வெகுவாகப் புழக்கத்தில் இருந்த காலம் ஒன்று இருந்தது. பலருக்கு அது உற்ற துணைவன். தொழிலாளிகளின் வாகனம். ஆலைச் சங்கொலி ஒலித்து முடிந்ததும் அணி அணியாக சைக்கிள்கள் வருவது என் கண்கள் நிறைந்த சிறு வயதுக் காட்சி. அப்படி ஒரு வாகனம் எனக்குச் சொந்தமாக இருபத்தைந்து வயது முடிய வேண்டியிருந்தது. அதில் வியப்பு இல்லை. ஆனால் அதை வசப்படுத்த எனக்கு அத்தனை ஆண்டு பிடித்தது. சைக்கிள் பழகும் முயற்சி வெவ்வேறு வயதில் தோல்வியிலேயே முடிந்தது. முதன் முதலில் ஒரு கோடை விடுமுறையில் ராமநாதபுரத்தில் பழக முயன்றேன். ஊரணிக் கரையில் சுவரோடு சுவராக வாலும் உயர்த்திய கையும்  வாயுமாக இருந்த ஆஞ்சனேயர் மேலேயே மோதி சைக்கிளோடு கீழே விழுந்தேன். பிரேக் என்ற ஒன்று இருப்பதையே அறியவில்லை.  அடுத்த கோடையில் அரை மணிக் கூறுக்கு வாடகை  சைக்கிள் எடுத்தும் எனக்குப் பத்து நிமிடமே ஓட்டக் கிடைத்தது. ஓட்டுவது  என்பது இருபுறமும் நண்பர்கள் சைக்கிளைத் தாங்கிப் பிடித்திருக்க பெடலை மட்டும்  நாம் சுற்றுவது.  திடீரென்று இருபுறமும் தாங்கிப் பிடிப்பவர்கள் இல்லை என்ற உணர்வு வரும். காற்றில் மிதப்ப...

நாதஸ்வர ஓசை

  சில வருடங்களுக்கு முன்பு அலுவலக நண்பரின் வீட்டுத் திருமணத்திற்குப் சென்றிருந்தேன். சந்தடிகளுக்கு நடுவே நாதஸ்வரத்திலிருந்து ராகங்கள் பெருகி வழிந்து கொண்டிருந்தன. ஆனால் கேட்பார் யாரும் இல்லை. தாலி கட்டிய சில நேரத்தில் நாதசுரத்திலிருந்து பழைய சினிமாப் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. எல்லாமே பொருள் பொதிந்த பாடல்கள். பூஜைக்கு வந்த மலரே வா.. என்ற பாடலை நாதசுரக்காரர் உற்சாகமாக வாசித்தார். வாசிக்க வாசிக்க வாசிக்க பாடல் வரிகள் மனதில் ஓடத் துவங்கியது. நானும் இன்னொரு நண்பரும் அருகில் சென்று அமர்ந்து கேட்டோம். வாசிப்பவர் பெரிதும் உற்சாகம் அடைந்தார்.  திருமணங்களில் நாதஸ்வரம் பெரிதாக முக்கியத்துவம் பெறுவதில்லை.  எங்கள் பகுதியில் இப்போது எல்லாம் கேரளத்திலிருந்து வந்து செண்டை மேளம் வாசிக்கிறார்கள். அது ஒரு தாள லயம். அது ஒரு ஓசை. எஸ்.ராமகிருஷ்ணன் "சஞ்சாரம்" என்று ஒரு நாவல் எழுதினார். அதற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அது நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கை பற்றியது. விருது கிடைத்த சமயம் எஸ்.ராமகிருஷ்ணன் இவ்வாறு சொன்னார். "நேற்று எல்லோரையும் சந்தித்த பின் அவர்களிடமிருந்து என்னைத் தனிமைப்பட...

ஒரு கடிதம்

  "Manchester,  June 21, 1865  Dear my heart, see, I am writing to you again. Do you know why? Because I am away from you and whenever I am away from you I feel even closer to you. You are in my mind all the time and I keep talking to you without any response from you, these are the distance and dear, they are very beautiful. While constantly staying together, we start to get so much into each other, in each other’s talk, in the habits, that it is not possible to see anything separately from it. Then small things, habits start taking big forms, irritations start filling up. But as soon as they go away, it all goes away in a moment, like any charisma, the distance brings up love, just like the sun and rain makes little plants. Oh my dear, these days the same charisma of love is happening to me. Your shadows surround me, my dreams are adorned with your scent. I know how these distances have cherished my love, it is decorated. "There are many women in this world, there are m...

நீ தொட்டால்...

  தாவரங்கள் நுணுக்கமான நரம்புக் கூட்டங்கள் அமையப் பெற்றவை. ஒளி,ஒலி,தொடுகை போன்ற புறத் தூண்டுதல்களுக்கு ஆட்படுபவை. தாவரங்கள் வலியை உணரும். எரித்தால்,ஒடித்தால்,வெட்டி எறிந்தால் மிகவும் வேதனைப் படும்.தாவரங்கள் பேசும். எப்படி? வேதிப் பொருட்களை சமிக்ஞையாக வெளிப்படுத்துவதன் மூலம். இந்த சமிக்ஞைகளை அருகில் இருக்கும் தாவரம் புரிந்து கொள்ளும்.  தாவரங்களால் கற்கவும் நினைவில் கொள்ளவும் முடியும். சில புறத் தூண்டுதல்களை அவை நினைவில் கொள்ளுமாறு கற்பிக்க முடியும்.  இப்படி எல்லாம் கண்டுபிடித்துச் சொன்னது ஜெகதீஷ் சந்திர போஸ்.  ஒரு நூறு ஆண்டுகளுக்கு மூன்பு. தான் கண்டு கொண்ட எதற்கும் அவர் காப்புரிமை பெறவில்லை. அதனால் அவருக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. அதற்காக அவர் கவலைப் படவும் இல்லை.  'கோனாகிச் சாத்திரத்தை யாளு மாண்பார் ஜகதீச சந்த்ரவஸு' என்று இவரைப் பாரதி புகழ்வார். "அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா? ஆம்'. என்ற பாரதியின் வசன கவிதை இங்கே பொருள் கொள்ளத் தக்கது. பல வருடங்களுக்கு முன்பு நண்பர் நரசிம்மனோடு திரூவனந்தபுரம் சென்றேன். இந்தப் பயணம் எப்படி என்றால் நெல்லை வரை பஜாஜ் ஸ்கூட்டரி...

உருகிடும் வேளையிலும்

  தாகம் என்று ஒரு திரைப்படம் 1974 ம் வருடம் வந்தது. மதுரையில சிந்தாமணி தியேட்டரில் ரிலீஸ் ஆனதாக ஞாபகம். முத்துராமன் மற்றும் நந்திதா போஸ் நடித்திருந்தனர். தமிழில் அது ஒரு சோதனை முயற்சி. மதுரை திரைப்பட ரசிகர்கள் அதை தங்களுக்கு ஏற்பட்ட பெரும் சோதனையாகக் கருதினர்.  விளைவு. படத்தை மூன்று நாட்களுக்கு முன்னாலேயே தூக்கி விட்டார்கள். முத்துராமன் பார்வையற்றவராக நடித்திருந்ததாக அறிந்தேன். எங்கள் கல்லூரி நூலகத்தில கணையாழி, தீபம் போன்ற பத்திரிக்கைகள் படிக்கக் கிடைக்கும். இந்தப் படத்தைப் பற்றி கணையாழி பத்திரிக்கையில் எழுதியிருந்தார்கள். நந்திதா போஸ் டவுன் பஸ்ஸில் செல்லும் காட்சியில் அவர் மேல் படர்ந்து விலகும் பார்வைகளை எப்படி காமிரா மூலம் அழகாகக் காட்சிப் படுத்தியிருந்தார்கள் என்று சொல்லி இருந்தார்கள். ஒரு பஸ் காட்சியில் காமிரா இப்படி புகுந்து புறப்படுவது அப்போதெல்லாம் பெரிய விந்தை.  இந்தப் படத்தை ஓரு இளைஞர் பார்த்தார். ஒரு காட்சியில் பஸ் சன்னலோரம் அமர்ந்திருக்கும் நந்திதா போஸின் ஒற்றை முடி காற்றில் பறக்கும். இந்த் காட்சியால் உந்தப் பட்டு திரைப்பட இயக்குநர் ஆக விரும்பினேன் என்று சொன்னா...

ஒரு மனிதன்

  ஜெயகாந்தனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இந்த விருது கொடுத்ததன் மூலம் சாகித்ய அகாடமி தன்னைக் கெளரவப்படுத்திக் கொண்டது என்று அவர் சொன்னார். விருது கிடைத்ததை விட இந்தப் பேச்சைப் பற்றியே எல்லோரும் பேசினார்கள். விருது வாங்கியதை முன்னிட்டு டெல்லியில ஒரு கூட்டம் நடந்திருக்கிறது. ஜெயகாந்தன் பேச வருகிறார். மைக் வேலை செய்ய வில்லை. உடனே ஜெயகாந்தன் தலையை மேலும் கீழும் அசைக்கிறார். உடனடியாகப் பார்வையாளர்களிடம்  ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார். Instant connect with the audience. இதைப் பற்றி கணையாழி பத்திரிக்கையில எழுதியிருந்தார்கள். மேலும் அவரோடு ஒரு பேட்டி கண்டு வெளியிட்டிருந்தார்கள்.  மதுரையில் ஜெயகாந்தன் பேச்சை மூன்று முறை கேட்டிருக்கிறேன். ஒன்று துக்ளக் பத்திரிக்கை இரண்டாவது ஆண்டு விழா. நான் பள்ளி மாணவன். அது பங்களாதேஷ் பிறந்த நேரம். முஜிபுர் ரஹ்மான் பற்றியும் வங்கம் பிறந்தது பற்றியும் மிகுந்த ஆவேசமாகப் பேசினார். வங்காளம் பிறந்த அந்த நாட்களில் எல்லோரும் மிகுந்த மனவெழுச்சி கொண்டிருந்தோம்.  இரண்டாவது மணியன் நடத்திய இதயம் பேசுகிறது பத்திரிக்கை விழா. சிவசங்கரி,ஓவியர்...