Skip to main content

Posts

இருள் விழும் போது

  பெர் லாகர்க்விஸ்ட் ஸ்வீடன் தேசத்து எழுத்தாளர். அவர் எழுதிய நாவல் Barabbas. அது நோபல் பரிசு பெற்ற நாவல். சென்ற வருடம் தான் படித்தேன். பாரப்பாஸ் ஒரு கொள்ளையன்.  சிலுவையில் ஏற்றப்பட்டு தண்டனை பெற வேண்டியவன். பஸ்கா விருந்து நாளில் மக்கள் விரும்பினால் ஒருவரை தண்டனையிலிருந்து விடுவிக்க முடியும். பிலாத்து கேட்கும் போது எல்லோரும் நசரேயன் என்ற ஏசுவைச் சிலுவையில் ஏற்றச் சொல்லிக் கூக்குரல் இடுகிறார்கள்.  பிலாத்து ஏசுவைச் சுட்டிக் காட்டி இந்த மனிதன் மேல் நான் ஒரு குற்றமும் காணவில்லையே என்று சொல்கிறான். பின்பு தண்ணீர் கொண்டு வரச் சொல்லி ஒரு பாத்திரத்தில் தனது கைகளைக் கழுவிக் கொள்கிறான். நீங்கள் சொல்வதால் ஏசுவைச் சிலுவையில் ஏற்றும் தண்டனையை வழங்குகிறேன். இந்தப் பாவம் என்னைச் சேராது என்கிறான். பாரப்பாஸ் நாவல் தண்டனைக்குத் தப்பிய கொளளையனைப் பற்றியது. இதனுடைய ஆங்கில மொழிபெயர்ப்பை படித்தது பற்றியே மேலே குறிப்பிட்டிருந்தேன்.  பெர் லாகர்க்விஸ்டின் எழுத்து எளிமையான சொற்களால் ஆனது.  ஆனால் அதனுடைய ஆழம் நம்மை எங்கோ கொண்டு அமிழ்த்தி விடும். நம்மைப் பற்றி மிகவும் யோசிக்க வைக்கும்....

உளன் எனில் உளன்

  உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள் உளன் எனஇலன் என இவை குணம் உடைமையில் உளன் இரு தகைமையோடு  ஒழிவிலன் பரந்தே நம்மாழ்வார் திருவாய்மொழி If He is, He is His forms are these forms If He isn't, He has no form He, these formless things.. He is, He isn't, He has these traits, the dualty.. He, the endless expanse In English by T Santhanam

ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும்

  ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அரவு ஊ று சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே நம்மாழ்வார் திருவாய்மொழி The sound of the river running back towards the mountain, The sound of the serpent's body coiled and rubbing against the mountain, The sound of the Ocean churning from left towards right, The Lord brought the elixir out after the churning, That festive moment! In English T Santhanam

நாளும் எழ

நாளும் எழ நில நீரும் எழ விண்ணும் கோளும் எழ எரி காலும் எழ மலை தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன் ஊளி எழ உலகம் உண்ட ஊணே நம்மாழ்வார் திருவாய்மொழி As the day rises As the land rises As the water rises As the sky rises As the planet rises As the fire rises As the wind rises As the foot of the mountain rises As the flame rises, As His hunger rises The world He feeds on In English by T Santhanam

அயலாரும் அறிந்தார்

  நாணி இனி ஓர் கருமம் இல்லை*  நால்அயலாரும் அறிந்தொழிந்தார்*  பாணியாது என்னை மருந்து செய்து*  பண்டு பண்டு ஆக்க உறுதிராகில்*  மாணி உருவாய் உலகு அளந்த*  மாயனைக் காணிற் தலைமறியும்*  ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில்*  ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்                                               ஆண்டாள்                                  நாச்சியார் திருமொழி To be shy is of no use Strangers in all corners have come to know Do me good without much delay So that I may be my own earlier self Seeing Him in the guise of a Dwarf Who scaled the three worlds, my head reel...

நள்ளிரவு அளவும் பகலும்

  கள்வனேனானேன் படிறு செய்திருப்பேன் கண்டவா திரிதந்தேனேலும் தெள்ளியேனானேன் செல்கதிக்கமைந்தேன் சிக்கெனத் திருவருள் பெற்றேன் உள்ளெலாமுருகிக் குரல் தழித்தொழிந்தேன்  உடம்பெலாம் கண்ணநீர் சோர நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன் நாராயணா என்னும் நாமம் பெரிய திருமொழி திருமங்கையாழ்வார் A robber I was, so full of deceit An aimless wanderer Came out clearer in mind Firmly treading the path towards salvation  And attained bliss, the greatest one With my heart melting and voice broken Tears rolling down all over my body Till the dark hours, the middle of the night, All through the day Shall I chant the name of Narayana . Peria Thirumozhi Thirumangai Alwar In English T Santhanam குறிப்பு: நாரம் என்பது அழிவில்லாப் பொருள்களின் கூட்டம், அயனம் என்றால் இடம். நாராயணன் என்றால் அழிவில்லாப் பொருள்களின் கூட்டத்திற்கு இடமாய் உள்ளவன்: அழிவில்லாப் பொருள்களை இடமாக உடையவன் என்று பெரியோர்கள் கூறுவர்.

சுடரும் இருளும்

  உளரும் இல்லை அல்லராய் உளராய் இல்லை ஆகியே உளர் எம் ஒருவர் அவர் வந்து என் உள்ளத்துள்ளே உறைகின்றார் வளரும் பிறையும் தேய் பிறையும் போல அசைவும் ஆக்கமும்  வளரும் சுடரும் இருளும் போல் தெருளும் மருளும் மாய்த்தோமே   8.8.10  நம்மாழ்வார் திருவாய்மொழி  He isn't  He isn't He is He isn’t  He is the one who comes and dwells in my heart  Like a crescent that waxes and wanes  The movement, the manifestation  Like a flame that rises and simmers into    darkness    The knowledge and delusion that we annihilated  In English, Nammalwar Thiruvaimozhi  By T Santhanam கற்றவர்கள் பிழை கண்டால் பொறுத்து அருள்க

கனவுகள் இல்லை

                    No Dreams The days are nothing. Plant and foliage grow silently, at night a star falls down, a leopard leaves its footprints. The wind blows into my eyes sometimes it stirs my heart to see the land so plain and beautiful. If I sit very still I think I can join the big mountains in their speechless ardour. Where no sun is visible the hills are washed with light. The river sings love floats! love floats! But I have no dreams. Mamang Dal                    கனவுகள் இல்லை பகல் பொழுதுகள் ஒன்றும் இல்லை செடிகளும் இலைகளும் மெளனமாக வளர்கின்றன  இராப் பொழுதில் ஒரு நட்சத்திரம் கீழே விழுகிறது  சிறுத்தை ஒன்று தனது கால் தடங்களை விட்டுச் செல்கிறது காற்று எனது கண்களுக்குள் வீசுகிறது சில பொழுது என் நெஞ்சம் கலங்குகிறது  இந்த நிலப்பரப்பு எளிமையாகவும் அழகாகவும் இருப்பதைக் கண்டு நான் சற்றும் அசையாது அமர...

டிக்கன்ஸை அறிந்த போது

சார்லஸ் டிக்கன்ஸை படிக்க வாய்த்தது பதினொன்று அல்லது பனிரெண்டு வயதில். நாவல்களின் சுருக்கிய வடிவம் Oxford Picture Series ஆக பள்ளி நூலகத்தில் கிடைக்கும்.  முகமெங்கும் அம்மை வடுக்கள் இருக்கும் நூலகர் அதிகம் பேச மாட்டார். கண்ணாடி அலமாரியில் பூட்டி வைத்திருக்கும்  புத்தகங்களைப் போல மெளனமாக இருப்பார். Great Expectations என்று ஒரு கதை. My name is Philip Phirrip என்று அந்தக் கதை துவங்கும். Miss Havisham என்று ஒரு பெண்மணி அந்தக் கதையில் வருவார். தீமையின் வடிவம். புத்தகத்தில் பார்த்த அவருடைய சித்திரம் மனதில் பதிந்து இருக்கிறது. பிலிப் பிர்ரிப் சுருக்கமாக பிப். ஒரு அனாதை.  இன்னொரு கதை. Oliver Twist.  அதில் ஒரு அத்தியாயத்தின் தலைப்பு  The Boy who asked for more. இவனும் அனாதை.  கொடுத்த உணவு கால் வயிற்றுக்குக் கூட போதவில்லை. சிறுவன் தானே? இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்கிறான். அதற்குத் தண்டனையாக இருட்டு அறையில் அடைக்கப் படுகிறான். ஆலைகளில் புகைப் போக்கியைச் சுத்தம் செய்ய பத்து பனிரெண்டு வயதுச் சிறுவர்களைப் பணியில் அமர்த்துவார்களாம். இந்தக் கதையைப் படித்த போதுதான் தெர...