Skip to main content

Posts

கிடந்த கடல்

திரியும் காற்றோடகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல் எரியும் தீயோடிரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய் கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை சுரியும் பல் கருங்குஞ்சி எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே                3.6.5 நம்மாழ்வார் திருவாய்மொழி The wind that wanders The sky that expands The earth compacted  The lying sea The raging fire The Sun, the Moon, the Gods And everything else complete Is His appearance… The dark skinned, The lotus eyed, Kannan,The Lord of Heaven With black hair that curls and A crown that gleams   In English T Santhanam

பால் மணக்குது

  I felt a nostalgic longing for the childhood: emotions that had been beautiful because they were never completely understood                                                      Ruskin Bond புதிய நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு வாசம் வரும். ஐந்தாறு வயதுப் பிள்ளைகளான நாங்கள் அதை முகர்ந்து மகிழ்வோம். அட்டையில் வண்ணப் படம். அதில் ஒரு  அழகான பாலகன். நெற்றியில் திருநீற்றுப் பட்டை. நடுவில் குங்குமம். அழகான புன்னகை. அவன் மயிலை அணைத்தபடி இருப்பான். அவனுக்குப் பெயர் முருகனாம்.  இன்னுமொரு படம். அதில் அழகான பாலகன் அருகில் யானை முகத்தோடு ஒருவன் நிற்பான். அவன் பெயர் பிள்ளையார் என்று சொன்னார்கள். வயது ஒத்து இருந்ததால் அவர்களோடு ஒரு இயல்பான சிநேகம் கூடியது. அவர்கள் எல்லாம் தெய்வங்கள் என்று பிறர் வாயால் அறிய நேர்ந்தது. கற்பனை...

உங்கள் மனதும் என் மனதும்

  முந்தைய பதிவின் தொடர்ச்சியாக ஹான் ஷானின் Cold Mountain தொகுப்பிலிருந்து மேலும் சில கவிதைகளைப் பார்க்கலாம் If there’s something good, delight! Seize the moment while it flies! Though life can last a hundred years, Who’s seen their thirty thousand days? Just an instant then you’re gone. Why sit whining over things? When you’ve read the Classics through, You’ll know quite enough of death. ஏதாவது நன்றாக இருந்தால், ஆனந்தம் கொள் பறந்து செல்லும் போதே அந்தக் கணத்தைப் பற்றிக் கொள் வாழ்க்கை நூறு வருடங்களாக இருக்கலாம் முப்பதாயிரம் நாட்களைக் கண்டவர் யார்? ஒரு சிறு கணம்.. நீ போய்விடுவாய் நின்று பலதுக்காகவும் புலம்புவது என்ன? செவ்விலக்கியங்களைப் படித்து முடித்து விட்டால் சாவைப் பற்றி போதுமான அளவு தெரிந்து கொண்டு விடுவாய் Where’s the trail to Cold Mountain? Cold Mountain? There’s no clear way. Ice, in summer, is still frozen. Bright sun shines through thick fog. You won’t get there following me. Your heart and mine are not the same. If your heart was like mine, You’d have made it, and be there...

மெளனம் பெருகி வழியும் போது

  ஹரித்வாருக்கு ஒரு முறை சென்றிருந்தேன். நெருக்கமாக இமயமலையைப் பார்த்தேன். அது ஒரு பேரனுபவம். மலையடிவாரத்தில் கங்கை பெருகி ஓடிக் கொண்டிருந்தாள். ஒரு பெரும் மெளனம் மலையிலிருந்து பெருகி வழிந்தோடுவது போல இருந்தது அது. மலையும் உண்மையும் வேறல்ல. பெரிய உண்மைகளை எல்லாம் மலை சொல்லித் தருகிறது. எனவே தான் உண்மையைத் தேடுபவர்கள் மலையைத் தேடிப் போகிறார்கள். ஏசுநாதர் மலை மேல் ஏறி நின்று கொண்டு தானறிந்த உண்மைகளைப் பிரசங்கமாகச் செய்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன் தனது இணையதளத்தில் ஹான்ஷான் என்ற சீனக் கவிஞரைப் பற்றி எழுதியிருக்கிறார். குறிப்பாக அவரது Cold Mountain என்ற கவிதைத் தொகுதி பற்றி. இதைப் படித்தவுடன் ஹான்ஷானை இணையத்தில் தேடினேன். கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் படித்தேன். ஹரித்வாரில் நெருக்கமாக இமயமலையைக் கண்டு பேச்சிழந்து போனதற்கு ஒப்பான அனுபவம் அது. சில கவிதைகள் தமிழில். Han-Shan A thousand clouds, ten thousand streams, Here I live, an idle man, Roaming green peaks by day, Back to sleep by cliffs at night. One by one, springs and autumns go, Free of heat and dust, my mind. Sweet to know there’s n...

உறக்கம் போனது

  ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடிவை எல்லாம் எளிமையால் இட்டென்னை  ஈடழியப் போயினவால் குளிர் அருவி வேங்கடத்து  என் கோவிந்தன் குணம் பாடி அளி அத்த மேகங்காள்  ஆவி காத்திருப்பேனே  நாச்சியார் திருமொழி Oh merciful clouds! My glow, My colour, My bangles, My thought, My sleep, All these l have lost I am weak I shall sing your  praise The Master of Cowherds My Lord of the seven Hills Of cold water falls Thus shall I save my soul In English T Santhanam

இழந்த காதல்

  சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய நாவல் A Tale of two Cities. அதில் வரும் ஒரு அத்தியாயத்தின் தலைப்பு  The fellow of no delicacy. அவன் தான் ஸிட்னி கார்ட்டன். அவன் ஒரு குறிக்கோளற்ற மனிதன். குடிகாரன். நிம்மதி இழந்து அலையும் ஒரு உயிர். அவனுக்கு லூஸி மானெட்டின் மீது காதல். கனிவும் நல்ல இயல்பும் கூடிய பெண்மை அது. எந்த விதத்திலும் அவன் அவளுக்குத் தகுதியானவன் அல்ல. இதை அறிந்நே இருக்கிறான். அவன் லூஸி மானெட்டைத் தனியே சந்தித்துப் பேசுவதுதான் இந்த அத்தியாயம். அவனுடைய கால்கள் அந்த கல் பதித்த நடைபாதையில் பல இரவுகள் நடந்திருக்கின்றன.  மது அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்ததில்லை. துக்கத்தில் தான் தள்ளி இருக்கிறது. இலக்கை அறியாதது அவனது கால்கள். விடியும் வரை அவன் நடந்தது உண்டு.  தேவாலயங்கள், புராதனமான கட்டிடங்களில் சூரியனின் முதல் கிரணம் விழுகின்ற வரை. படுக்கையில் விழுந்தாலும் உறக்கம் அவனைப் பற்றியது இல்லை. இன்று இரவு அவனது கால்கள் ஒரு இலக்கை அறிகிறது. அது லூஸி மானெட்டின் இல்லம். வீட்டில் விளக்கு எரிகிறது.  அவன் உள்ளே நுழைகிறான். அவனது வரவு அறிவிக்கப் படுகிறது. மாடியில் லூஸி மானெட் தனித்து ...

தரையைத் தழுவும் மொட்டு

  சில நாட்களாகவே ரூமியின் பாடல்களில் கவனம் குவிந்தது. ரூமி என்று அழைக்கப்படும் ஜலாலுதீன் ரூமி ஒரு சூஃபி அறிஞர். சூஃபி என்பது கடவுளுடன் ஆன அன்பு. கடவுளை ஒவ்வொருவரும் தானே அனுபவித்து அறிவது. அது ஒரு தெய்வீக உறவு. ரூமியின் கவிதைகள் பெரும்பாலும் பாரசீக மொழியில் எழுதப்பட்டவை.  சில கவிதைகளைத் தமிழில் செய்தேன். அவற்றைப் பார்க்கலாம். Your laughter turns the world to paradise Jalal al-Din Rumi translated from the Farsi by Haleh Liza Gafori Your laughter turns the world to paradise. It tears through me like fire. It teaches me. Reborn in emptiness, I emerge laughing, here to learn from Love new depths of laughter. I’ve been short on courage, but I have a heart of sunlight, straight from the king’s hand. I stir up laughter even in those who fear joy. Crack open my shell. Steal the pearl. I’ll still be laughing. It’s the rookies who laugh only when they win. Last night, the spirit of dawn came to my room and gave me a lesson in laughter. Our blazing roars lit the morning sky. When I brood...