எண்பதுகள் சிறு பத்திரிகைகளின் காலம். எண்ணிலடங்காத சிறு பத்திரிக்கைகள் வெளி வரும். எழுத்து, நடை, கசடதபற, ழ, கல் குதிரை, பிரக்ஞை, வெளி, விருட்சம் என்றெல்லாம் பெயர்கள். பெரும்பாலும் தவற விட்டது இல்லை. வாங்கிப் படித்திருக்கிறேன். இலக்கியப் பத்திரிக்கைகள் சில இடது சாரி அரசியல் சார்ந்து இருக்கும்.. முழுக்க முழுக்க இலக்கியம் சார்ந்த பத்திரிக்கைகளும் உண்டு. இளமை கட்டுக்கு அடங்காதது. வேகம் கொண்டு எங்கும் பரவுவது. மேலும் மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொண்டு திரிவது. பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றிய எங்களைப் போன்றவர்கள் பூபாளம் என்று கையெழுத்துப் பத்திரிக்கை நடத்திப் பார்த்த காலமது. சமீபத்தில் மறைந்து விட்ட நண்பர் செளந்தரராஜன் ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினார். அவர் என்னோடு அறிமுகமானதற்குக் காரணமே அதுதான். அன்று தொடங்கிய நட்பு இத்தனை காலம் தொடர்ந்தது. நாம் துவக்கத்தில் குறிப்பிட்ட பத்திரிக்கைகளில் ஏதோ ஓரு பத்திரிக்கையில் (சரியாக நினைவில்லை) ஸ்ரீராம் என்பவர் ஒரு பிரெஞ்சுக் கவிதையை மொழிபெயர்த்து எழுதியிருந்தார். நான் அறிந்த வரையில் ஸ்ரீராம் பிரெஞ்சு மொழியிலிருந...