Skip to main content

Posts

புடம் இட்ட தங்கம்

  துக்காராம் மராத்தியில் பாடல்கள் எழுதினார். கனிந்த பக்தியில் பிறந்த பாடல்கள் அவை. அபங்கு (Abhang) என்ற வகையைச் சேர்ந்த பாடல்கள். இவ்வகைப் பாடல்களை கர்நாடக இசைப் பாடகி அருணா சாய்ராம் பாடக் கேட்டிருக்கிறேன்.  வாழ்க்கைத் துயரங்கள் துக்காராமை விரட்டியது. விட்டலனின் நினைவில் அவர் கணத்துக்குக் கணம் மீண்டு எழுபவராக இருந்தார். தன்னை மறந்த லயிப்பில் பாடல்கள் பிறந்த வண்ணம் இருந்தன. ஊரும் உறவும் அவரைப் புரிந்தால் தான் என்ன? புரியாமல் போனால் தான் என்ன? எளிய வரிகள் சிறிய அலைகள் போல எழுகின்றன. பெரிய பாறை போன்ற த்வைத அத்வைத சிந்தனைகளின்  மேல் மெல்ல மோதுகின்றன. தனது தன்மையில் நிற்கின்றன. இந்தப் பாடலைப் பாருங்கள். தண்ணீர் தன்னையே பருக முடியுமா? மரம் தனது கனிபைத் தானே ருசிக்குமா? கடவுளை வணங்குபவர் அவரிடமிருந்து வேறுபட்டே இருக்க முடியும் அப்படி இருந்தால் தான் அவரது ஆனந்தமான அன்பைத் தெரிந்து கொள்ள முடியும் கடவுளும் அவனும் ஒன்று என்று சொல்வானே யானால் அந்த ஆனந்தமும் அன்பும் மறைந்து விடும் உடனடியாக கவிதையைப் பற்றி மிகவும் அழகாக இப்படிச் சொல்கிறார். To arrange words in some order Is not the sam...

நண்பனாகி

 ரஷ்ய எழுத்தாளர்களை வெவ்வேறு வயதில் படித்திருக்கிறேன். டால்ஸ்டாய், செகாவ், தாஸ்தயவோஸ்கி போன்ற எழுத்தாளர்களைப் படிக்க வாய்த்திருக்கிறது. அதாவது அவர்களது முக்கியமான படைப்புகளை. துர்கனேவ் என்ற ரஷ்ய எழுத்தாளரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். இவருடைய Fathers and Sons முக்கியமான படைப்பு என்று சொல்வார்கள். படித்ததில்லை. சமீபத்தில் துர்கனேவின் கவிதை ஒன்று படிக்கக் கிடைத்தது. கவிதைகளையும் கவிதை போன்ற தருணங்களையும் மனம் தவற விடுவதில்லை. இந்தக் கவிதையின் ஆங்கில வடிவத்தையும் நான் அதை தமிழாக்கம் செய்ததையும் கீழே தருகிறேன். A prisoner, condemned to confinement for life, broke out of his prison and took to head-long flight.... After him, just on his heels flew his gaolers in pursuit. He ran with all his might.... His pursuers began to be left behind. But behold, before him was a river with precipitous banks, a narrow, but deep river.... And he could not swim! A thin rotten plank had been thrown across from one bank to the other. The fugitive already had his foot upon it.... But it so happened t...

உனது தோணி

 இன்று பகல் பாத காணிக்கை என்ற திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். மெகா டிவியில் ஒளிபரப்பானது. படத்தில் பாடல்கள் அருமையாக இருக்கும். ஆனால் ஒரு பாடலைக் கூட ஓரிரண்டு வரிகளுக்கு மேல் ஒளிபரப்ப வில்லை. ஓயாது விளம்பரங்கள். நான் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த பாடல் உனது மலர் கொடியிலே. வரவேயில்லை.  அதிர்ஷ்ட வசமாக அந்தக் குறை தீர்ந்தது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இந்தப் பாடலைப் பற்றி ஒரு அழகான கட்டுரையை  தனது இணைய தளத்தில் இன்று வெளியிட்டு இருக்கிறார். சில பகுதிகளை அப்படியே கீழே தருகிறேன். உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே உனது நிலா விண்ணிலே எனது நிலா கண்ணிலே பாதகாணிக்கை திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் பாடல். எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை. பி.சுசிலா எல்.ஆர்.ஈஸ்வரி இருவரும் இணைந்து மிக அழகாகப் பாடியிருப்பார்கள். அந்தப் பாடலை உடனே கேட்க வேண்டும் என இணையத்தில் தேடி பாடலைக் கேட்டு முடித்தேன். ஆனால் மனம் திருப்தி அடையவில்லை. மீண்டும் மீண்டும் அதே பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பி.சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி இருவரது குரலையும் மாற்றி மாற்றி எனது காந்திமதி சித்தி பாட...

காகித மலர்கள்

   குரு தத் மேன்மையான கலைஞன். சினிமாவின் மேல் அவர் தீராத தாகம் கொண்டிருந்தார். சொந்த வாழ்க்கையில் அவர் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். கீதா உடன் ஆன அவரது திருமண உறவு முறிந்து போனது. அதனால் அவர் பெரிதும் பாசம் வைத்திருந்த மகளையும் பிரிந்து வாழ நேர்ந்தது. தன்னை மாய்த்துக் கொண்ட இரவு வரை அவர் மகளின் நினைவாகவே இருந்தார். குரு தத்தின் படங்கள் வெற்றி அடைந்திருக்கின்றன. படு தோல்வியையும் சந்தித்திருக்கின்றன. அப்படி தோல்வியை சந்தித்த திரைப்படம் காகஸ் கே பூல் (காகித மலர்கள்) குரு தத் மற்றும் வஹீதா ரஹ்மான் முக்கிய வேடம் ஏற்றிருந்தார்கள். 1959 ல் வெளி வந்தது. குரு தத் தயாரித்து இயக்கியிருந்தார். அது ஒரு சினிமாஸ்கோப் படம்.  சுரேஷ் சின்ஹா புகழின் உச்சியில் இருக்கும் சினிமா இயக்குனர். சினிமாவில் அவர் இருப்பது அவருடைய மனைவிக்கும் மனைவியின் பெற்றோருக்கும் பிடிக்கவில்லை.  எனவே மனைவியைப் பிரிந்து இருக்கிறார். இவருடைய சினிமா வாடையே படாமல் ஒரே மகள் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறாள். பெண்ணைச் சந்திக்கச் சென்றால் அங்கே அனுமதி மறுக்கப்படுகிறது. சாந்தி மருந்துக் கம்பனியில் வேலை பார்க்கும் எளிய பெண...

குருவிகள் தங்கக் கட்டி

  அடைக்கலாங் குருவிகளைப் பாருங்கள். அவை விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை. இப்படி பைபிளில் ஒரு வாசகம் வரும்.  காலையில் குயில்கள் கண்ணில் படுகின்றன. மைனாக்கள் தென்படுகின்றன. புறாக்கள் கூட வருகின்றன. ஆனால் குருவியைப் பார்க்க முடிவதில்லை. குருவியையும் குரங்கையும் வைத்து ஒரு கதை. ஒன்றாவது வகுப்பிவோ இரண்டாவது வகுப்பிலோ பாடமாக வந்தது.  மரத்தில் இரண்டு குருவிகள் கூடு கட்டி வாழ்ந்து வந்தன. ஒரு நாள் மழை பெய்தது. மரத்தடியில் ஓரு குரங்கு வந்து அமர்ந்தது. குளிரில் கை கால்கள் நடுங்க இருந்தது. அப்போது மரத்தின் மேல் இருந்த குருவிகளின் ஒன்று சொன்னது.  உனக்குத் தான் கை கால்கள் இருக்கின்றனவே? ஏன் குளிரில் நடுங்கியபடி கஷ்டப் படுகிறாய்? ஒரு கூடு கட்டிக் கொள்வது தானே?  இதைக் கேட்ட குரங்குக்கு கோபம் வந்து விட்டது. ஊசி மூஞ்சி மூடா!  எனக்கா புத்தி சொல்ல வந்தாய்? எனக்குக் கூடு கட்டத் தெரியாது. ஆனால் கூட்டை பிரிக்கத் தெரியும் என்று கூறியபடியே மரத்தில் ஏறி கூட்டைப் பிரித்து எறிந்தது. இப்படிக் கதை முடியும். மூடருக்கு அறிவுரை கூறலாகாது என்பது இதன் நீதி. நான் பள்ளியில் படிக்கும் போது ...

ஒரு குரல் ஒரு அடையாளம்

  அந்தக் குரல் மென்மை கொண்டு இழைவது. ஆழமான சோகத்தை உள்ளே தரித்துக் கொண்டது. கேட்பவர் மனத்தைத் தவிப்பு கொள்ள வைப்பது. கேட்டு முடித்த உடன் மனம் வேறு எதிலும் லயிக்க விடாதது.. மனம் ஏதேதோ நினைவுகளில் மூழ்கி விடும். சென்னையில் ராஜகுமாரி என்று ஒரு தியேட்டர் இருந்தது. அங்குதான் அந்தக் குரலை முதலாகக் கேட்டேன். அப்போது எனக்குப் பதினாறு வயது. பரிச்சய் என்று ஒரு ஹிந்தித் திரைப்படம். ஆர்.டி.பர்மன் இசை. பாடலை எழுதியவர் குல்ஸார். லதா மங்கேஷ்கர் உடன் இணைந்து பாடிய அந்தக் குரலைப் பற்றி தான் மேலே குறிப்பிட்டேன்.  அது பூபேந்தர் சிங் என்ற பாடகரின் குரல். ஹிந்துஸ்தானி இசை திரைப் பாடல்களில்  இருந்து முற்றிலும் நீங்கி விடாத காலம் அது. எனக்கு ஹிந்தி ஓரளவு அப்போது பரிச்சயம் ஆகி இருந்தது. அதாவது பரிச்சய் என்றால் பரிச்சயம் என்று புரிந்து கொள்ளும் அளவிற்கு.  நான் சொன்ன பாடல் பீதி நா பிதாயி ரயினா என்று துவங்கும். அந்தக் காட்சியில் ஜெயா பாதுரி யும் சஞ்சீவ் குமாரும் நடித்திருப்பார்கள். ஜெயா மகள். சஞ்சீவ் நோயுற்ற தந்தை. ஜெயா பாடுவார். பாதி பாடும் போது  வரிகள் தவறி விடும். அப்போது சஞ்சீவ் அந்த ...

சிலி தேசத்துக் குயில் 2

  என்னுடைய முந்தைய பதிவைப் படித்துவிட்டு தம்பி சேகர் எழுதியிருந்தான். தீவிரமாக மொழிபெயர்ப்பில் இறங்கலாமே என்று. நண்பர் ராமச்சந்திரன் பாப்லோ நெருடாவின் The Captain's verses என்ற தொகுப்பில் தான் 'உனது சிரிப்பு" என்ற கவிதை இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டார்.  இது எனக்கு ஒரு உத்வேகத்தைத் தந்தது.  The Captain's Verses ஐ தேடினேன். கிடைத்தது. தேடுவதெல்லாம் கிடைத்து விடுகிறது உடனே. அதற்குப் பெரிதும் மகிழ முடிவதில்லை.  The Captain's Verses  ல்  43  கவிதைகள் இருந்தன.  கிடைத்ததை எல்லாம் மொழி பெயர்க்க மனம் துடிப்பதில்லை. அது முடிவதும் இல்லை.  எனது தேர்வாக ஒரு கவிதை இறந்து போன பெண் திடீரென்று நீ இல்லாமல் போனால் திடீரென்று நீ வாழவில்லை என்றால் நான் வாழ்ந்து கொண்டுதான் இருப்பேன் நான் துணியவில்லை இதை எழுதத் துணியவில்லை நீ இறந்து போனால் நான் வாழ்ந்து கொண்டுதான் இருப்பேன் ஏனென்றால் எங்கே ஒரு மனிதனுக்குக் குரல் இல்லையோ அங்கே நான் குரலாக வேண்டும் எங்கே கறுப்பர்கள் தாக்கப் படுகிறார்களோ  அங்கே நான் இறந்தவனாக இருக்க முடியாது எனது சகோதரர்கள் சிறை செல்லும் போது ...